செம ட்விஸ்ட்.. "கொங்கை" க்ளீன் ஸ்வீப் செய்யும் திமுக! அடித்து தூக்கிய ஸ்டாலின்! அதிமுகவிற்கு அடி!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மாவட்டங்களான கரூர், திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல்லில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தபால் வாக்குகள் அனைத்திலும் திமுகதான் தமிழ்நாடு முழுக்க முன்னிலை வகித்தது.
தற்போது முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. 21 மாநகராட்சிகளில் 14ல் திமுக முன்னிலை வகிக்கிறது. வேறு கட்சிகள் மாநகராட்சியில் முன்னிலை வகிக்கவில்லை. பேரூராட்சிகளில் திமுக 183, அதிமுக 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. நகராட்சிகளில் திமுக 57, அதிமுக 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

கொங்கு
கடந்த சட்டசபை தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றிபெறவில்லை. சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுக சட்டசபை தேர்தலில் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. கரூரில் மட்டுமே திமுக சிறப்பான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மாவட்டங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

கோவை
கரூர் மாநகராட்சியில் 37 வார்டுகளில் திமுக முன்னிலை. இங்கு 48 வார்டுகள் உள்ளது. அதிமுக இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மீதம் உள்ள வார்டுகள் எதிலும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதுவும் முன்னிலை வகிக்கவில்லை. கோவையில் உள்ள 100 வார்டுகளில் 31 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இங்கு அதிமுக ஒரு வார்டில் மட்டுமே முன்னிலை வைக்கிறது. இங்கும் பாஜக எங்கும் முன்னிலை வகிக்கவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் 16 வார்டு திமுக, 2 வார்டு அதிமுக முன்னிலை வகிக்கிறது.

சேலம்
சேலத்தில் 60 வார்டுகளில் 21 வார்டில் திமுக முன்னிலை வகித்துக்கொண்டு வகிக்கிறது. சேலத்தில் அதிமுக 2 வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல் பாஜக இங்கு முன்னிலை வகிக்கவில்லை. திருப்பூரில் 60 வார்டுகளில் 13 வார்டில் திமுக முன்னிலை வகித்துக்கொண்டு வகிக்கிறது. சேலத்திலும் இதுவரை அதிமுக 7 வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது.
Recommended Video

திருப்பூர்
அதிமுக வலுவாக இருக்கும் சேலம், திருப்பூர், கோவை மூன்றிலும் அதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது. அதேபோல் பாஜகவும் இங்கு முன்னிலை வகிக்கவில்லை. மேலும் ஈரோட்டில் இருக்கும் 60 வார்டுகளில் 6 வார்டில் திமுக முன்னிலை வகித்துக்கொண்டு வகிக்கிறது. இங்கும் அதிமுக, திமுக முன்னிலை வகிக்கவில்லை. கொங்கு மாவட்டங்களில் திமுக முன்னிலை வகிக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications