திமுக தட்டி தூக்கினாலும்.. விடாமல் துரத்தும் அதிமுக.. எங்கெங்கு வெற்றி தெரியுமா? ட்விஸ்ட் நடக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. பல்வேறு தொகுதிகளின் முடிவுகள் விரைவில் வெளியாகி விட்டன.

தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 12838 பதவிகளுக்கு தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

இது போக மேயர், நகர மன்ற தலைவர் உள்ளிட்ட மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிமுக எத்தனை இடங்களில் லீடிங்கில் இருக்கிறது. எத்தனை இடங்களில் வென்றுள்ளது என்று பார்க்கலாம்.. பேரூராட்சியில் அதிமுக 334 வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பாலும் கொங்கு மண்டல மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் அதிமுக அதிக பேரூராட்சிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

நகராட்சி

நகராட்சி

இன்னொரு பக்கம் நகராட்சியில் அதிமுக கொஞ்சம் பின்னடைவை சந்தித்துள்ளது. அதிமுக மொத்தம் 97 நகராட்சி வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது. மாநகராட்சி வார்டுகளில் மொத்தமாக அதிமுக 12 வார்டுகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகள்: திமுக- 774, வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. நகராட்சிகளில் திமுக 310 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. மாநகராட்சிகளில் திமுக 115, வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.

வேறுபாடு ஜாஸ்தி

வேறுபாடு ஜாஸ்தி

திமுக அதிமுகவிற்கு இடையே பெரிய அளவிலான வேறுபாடு காணப்படுகிறது. பேரூராட்சியில் மட்டுமே அதிமுக கிட்டத்தட்ட திமுகவிற்கு நெருக்கமாக இருக்கிறது. இருப்பினும் திமுகவை அதிமுக வேகமாக சேஸ் செய்து வருகிறது. ஆனால் இது தொடக்க கட்ட முன்னணி நிலவரங்கள்தான் போக போக அதிமுக திமுகவை முந்துமா, பேரூராட்சிகளில் திமுகவிற்கு அதிமுக ட்விஸ்ட் கொடுக்குமா என்று இனிமேல்தான் தெரியும். 10 மணிக்கு பின் முழுமையான முன்னணி நிலவரங்கள் தெரிய வரும்.

வெற்றி விவரம்

வெற்றி விவரம்

இதுவரை அதிமுக உறுதியாக வெற்றிபெற்ற வார்டுகளின் விவரங்கள், நெல்லை களக்காடு நகராட்சி 2வது மற்றும் 3வது வார்டில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். தென்காசி இலஞ்சி போரூராட்சியில் முதல் வார்டில் அதிமுக வேட்பாளர் காத்தவயராயன் வெற்றிபெற்றுள்ளார். தென்காசி குற்றாலம் பேரூராட்சி ஒன்றாவது வார்டில் அதிமுக வேட்பாளர் கணேஷ் தாமோதரன் வெற்றிபெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+