உள்ளாட்சி தேர்தல் எப்போது?.. மாநில நிதிக்குழு பதவிக்கால நீட்டிப்பால் எழுந்த புது குழப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப்பகிர்வு குறித்து பரிந்துரை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட தமிழக அரசின் ஏழாவது நிதிக்குழுவின் பதவிக் காலம் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தல் தற்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை, மாநில அரசின் நிதிப் பகிர்வு குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை வழங்கும் வகையில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் தமிழக அரசின் ஏழாவது மாநில நிதிக்குழு, 2025ல் அமைக்கப்பட்டது.

Tamil Nadu Local Body Elections

இந்தக் குழு தனது அறிக்கையை 2026 ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆய்வு பணிகள் முழுவதுமாக நிறைவடயைாததால் இந்தக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநில அரசின் வருவாயை உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்வது, அமைப்புகளின் பரப்பு, வளர்ச்சி விகிதம், மக்கள் தொகை, வருவாய் போன்றவற்றின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து இந்தக் குழு பரிந்துரைகளை வழங்கும். இந்நிலையில், இந்த குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, விளக்கம் அளித்துள்ள உள்ளாட்சித் துறை அதிகாரிகள், தவெக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு வார்டு மறுவரையறை, மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு நேரடி தேர்தலா அல்லது மறைமுக தேர்தலா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.

தற் போது ஒன்பது மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி பதவிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. மானியக் கோரிக்கை மீதான விவதாங்கள் முடிந்த பின்னரே தேர்தல் அட்டவணை குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்.

மாநில நிதிக் குழுவின் பதவிக்கால நீட்டிப்புக்கும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+