'ஹெலிகாப்டர் டிப்ளமஸி'.. தமிழகத்தை விட்டு போன ஃபாக்ஸ்கான், HCL! ரூ.3,700 திட்டம் உ.பிக்கு தாவியது
சென்னை: தமிழகத்திற்கு ஃபாக்ஸ்கான், ஹெச்சிஎல் நிறுவனத்தின் சார்பில் வர இருந்த செமி கண்டக்டர் ஆலை தற்போது உத்தரப் பிரதேசத்திற்கு மாறியிருக்கிறது. இதனால் ரூ.3,700 கோடி அளவிலான முதலீடுகள் கையை விட்டு போயிருக்கின்றன.
இந்த அளவுக்கான முதலீடு நிச்சயம் தமிழகத்திற்கு மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கியிருக்கும். ஆனால், வாய்ப்பை தமிழகம் நழுவவிட்டுவிட்டது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

செமி கண்டக்டர்தான் இனி எதிர்காலம் என்று பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், தமிழகம் இந்த வாய்ப்பை சாதூர்யமாக பயன்படுத்தி, உற்பத்தி ஆலையை இங்கு நிறுவி இருக்க வேண்டும். ஆனால் வாய்ப்பு உத்தரப் பிரசதேத்திற்கு சென்றிருக்கிறது. இது குறித்து திமுக சார்பில் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த தலைவர்கள், "மத்திய அரசு தலையீடு செய்து வாய்ப்புகளை தட்டி பறித்தவிடுகிறது. இதற்கு 'ஹெலிகாப்டர் டிப்ளமஸி' என்று பெயரே இருக்கிறது" என கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டை சேர்ந்த ஷிவ் நாடாரின் நிறுவனம்தான் ஹெச்சிஎல். அதேபோல தமிழகத்தில் ஏற்கெனவே தொழிற்சாலையை ஃபாக்ஸ்கான் நிறுவனம் நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில் செமி கண்டக்டர் ஆலையை அமைப்பது தொடர்பாக பேச்சுகள் எழுந்தபோது தெலங்கான மாநிலம் முந்திக்கொண்டு இந்த ஆஃபரை பயன்படுத்த முயன்றது. ஆனால் தமிழ்நாடு சிறந்த உள்கட்டமைப்பை கொண்டிருப்பதால், ரூ.3,700 கோடி ஆஃபர் நம் கைக்கு கிடைத்தது. இருப்பினும் இது தற்போது உத்தரப் பிரதேசத்திற்கு கைமாறியிருக்கிறது.
கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழகத்திற்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது.
நிறுவனத்தை சேர்ந்தவர்கள் முதலில் தமிழ்நாட்டை அணுகுகிறார்கள். இங்கு தொழில் செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருப்பதை உணர்ந்த பின்னர் தொழில் தொடங்க பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இதற்கிடையில் மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு நடக்கிறது. அதன் பின்னர் உ.பி பக்கம் போய்விடுகிறார்கள் என்று திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால், சரியான வாய்ப்புகளும், சலுகைகளும் கிடைப்பதால்தான் நிறுவனங்கள் உ.பிக்கு செல்கிறது என பாஜகவினர் கூறுகின்றனர். பாஜக மாநிலதுணை தலைவர் திருப்பதி நாராணயனன் கூறுகையில், உத்தரப் பிரசதேசம் அதிக ஆஃபர்களை கொடுத்ததால் வாய்ப்புகள் கையைவிட்டு சென்றிருக்கின்றன. தமிழ்நாடு முன்னேறிய மாநிலம்தான். ஆனால், முன்பு 5 கி.மீ தொலைவில் இருந்த மற்ற மாநிலங்கள் தற்போது ஒரு சில மீட்டர்கள் வரை பின்னே வந்துவிட்டன. நமக்கும் மற்ற மாநிலங்களுக்குமான இடைவெளி குறைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications