வெப்பத்திற்கு பைபை.. தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கணிப்பு
தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. அக்கினி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெப்பநிலை உச்சம் தொட்டு இருக்கிறது.

தற்போது உள்கர்நாடகா முதல் குமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக வெப்பநிலை நிலவி வருகிறது.
ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 5-ந் தேதி 103 டிகிரி, அடுத்த நாள் 6-ந் தேதி 105 டிகிரி, 29-ந் தேதி 104 டிகிரி வெயில் மிக மோசமாக இருந்துள்ளது. இதே நிலை பல மாவட்டங்களில் நிலவியது.இந்த வருடம் மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்யும். தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வெப்பநிலை காரணமாக தமிழகத்தில் சூடு தற்காலிகமாக தணியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications