எல்லாத்தையும் மாத்தணும்.. மொத்தமாக ஆட்டத்தை கலைக்கும் உதயநிதி.. இப்படி ஒரு முடிவா? ட்விஸ்ட்!
சென்னை: திமுகவின் மா.செ.க்கள் கூட்டம் வருகிற 16-ந்தேதி சென்னையில் கூடுகிறது. செப்டம்பர் மாதம் நடக்கும் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படவிருக்கிறது என்றாலும், வேறு ஒரு முக்கிய முடிவு எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது என்கிறது அறிவாலய வட்டாரம்.
அதாவது, கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் வேறுபாடில்லாமல் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்படுவதால், விழாவை சிறப்பிக்கவும் விமர்சியாக நடத்தவும் மா.செ.க்களுக்கு சில பொறுப்புகள் கொடுக்கப்படவிருக்கிறது. மேலும், திமுகவில் இப்போது 72 மா.செ.க்கள் இருக்கின்றனர்.

எண்ணிக்கை மாற்றம்: இந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய தலைமை யோசித்துள்ளது. சீனியர்-ஜூனியர் பாகுபாடில்லாமல் கட்சியின் மாவட்ட எல்லைகள் அனைவருக்கும் சமமாக இருக்கும் வகையில் மாற்றியமைக்க விரும்புகிறார் உதயநிதி. அந்த வகையில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மா.செ. என்பதாக மாற்றியமைக்க வேண்டுமென தலைமைக்கு சொல்லப்பட்டுள்ளது.
மா.செ.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது குறித்த யோசனை நீண்ட மாதங்களாக இருந்து வரும் நிலையில், தற்போது இதனை சீரியசாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு தேர்தல் பணிகளை அக்குழுவினர் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் தேர்தல் வேலைகளை இலகுவாகவும் இயல்பாகவும் செய்வதற்கு வசதியாக இப்போதே கட்சியின் மாவட்ட எல்லைகள் பிரிக்க ஆலோசிக்கிறது தலைமை. மேற்கண்ட விசயங்களும் மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று அறிவாலய வட்டாரங்களில் பரவிக் கிடக்கிறது.
அமைச்சரவை கூட்டம்: இது பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. முன்னதாக தமிழக அமைச்சரவையின் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதிதான் நடந்தது. அதன்பின் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மீண்டும் கூட்டம் நடந்தது. இந்த நிலையில் அடுத்த வாரம் மீண்டும் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணத்திற்கு முன்னதாக பல அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒரு வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். இதற்கான லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளது. 2 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார்களாம். அதேபோல் 1 புதிய அமைச்சர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளார். இதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தமிழகத்திற்கான வெளிநாட்டு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த பயணத்தை அவர் மேற்கொள்வதாகச் சொல்லப்பட்டது.
அமைச்சரவை மாற்றம்: இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் விரைவில் புதிய அமைச்சரவை பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சில அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனியர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால்.. முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக ஆட்டத்தை கலைத்து ஆடும் திட்டத்தில் இருக்கிறாராம். இதனால் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில வாரங்களில் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து துறை, மின்சார, அமலாக்கத்துறை ஆகியவை மாற்றம், உள்ளாட்சி துறை மாற்றம், விளையாட்டு துறை மாற்றம்.. ஆகிய துறைகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது .
உதயநிதி ஸ்டாலின்: புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக ஆட்சி கட்சியாக இருக்கிறது. வலிமையான கூட்டணி வைத்துள்ளனர்.
ஆனால் ஆட்சி மீது சில விமர்சனங்கள் உள்ளன. இந்த விமர்சனங்களை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றப்படும். 5-6 அமைச்சர்கள் மீது புகார் சென்றுள்ளது. அவர்கள் மாற்றப்படலாம். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், கட்சிக்கு வெளியே அதிகாரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ஸ் கூடிக்கொண்டே வருகிறது. இதனால் அமைச்சரவை பற்றிய முடிவுகளும் எடுக்கப்படலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications