ரூ.1 லட்சம் வரை அலோவன்ஸ் உயர்த்திய விஜய்.. இப்போது தமிழக எம்எல்ஏக்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக எம்எல்ஏக்களுக்கு புதிய கார் வழங்கப்படும். காருக்கான பராமரிப்பு செலவாக மாதம் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். உதவியாளர் படியாக மாதம் ரூ.25,000 வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் இன்று சட்டசபையில் அறிவித்தார். இந்த அறிவிப்பால் தமிழக எம்எல்ஏக்களின் மாதசம்பளம் ரூ.1.05 லட்சத்தில் இருந்து ரூ.1.80 லட்சமாக கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

tamil-nadu-mlas-salary-increased-from-rs-1-05-lakh-to-rs-1-80-lakh-after-vijays-announced-vehicl

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் குட்நியூஸ் ஒன்றை அறிவித்தார். இதுதொடர்பாக முதல்வர் விஜய், ''அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். வாகனத்திற்கு டிரைவர், எரிபொருள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75,000 வழங்கப்படும். அலுவலக பணிகளில் உதவி செய்ய ஒரு உதவியாளரை நியமித்து கொள்ள மாதந்தோறும் ரூபாய் 25,000 உதவியாளர் படியாக வழங்கப்படும்'' என்றார்.

காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு வென்ற ஜோதிமணி கடந்த 12ம் தேதி பேசியபோது தனக்கு கார் வசதி இல்லை என்றும் தனியாக செயலாளரை நியமித்து சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றும் கூறினார். அவரது கோரிக்கையை ஏற்று முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

விஜய்யின் இந்த அறிவிப்பால் எம்எல்ஏக்கள் ஹேப்பியாகி உள்ளனர். அதேவேளையில் பொதுமக்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளனர். தமிழகம் கடன் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்ததாக முதல்வர் விஜய் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிலையில் இப்போது எம்எல்ஏக்களுக்கு ஏன் கார் வழங்க வேண்டும்? மாதந்தோறும் கார் செலவினத்திற்காக ரூ.75 ஆயிரம் ஏன் வழங்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதற்கிடையே தான் முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பால் தமிழக எம்எல்ஏக்களின் மாதசம்பளம் என்பது கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதாவது தற்போது தமிழக எம்எல்ஏக்களின் மாத சம்பளம் ரூ.1.05 லட்சமாக உள்ளது. விஜய் வெளியிட்ட இன்றைய அறிவிப்பால் அந்த சம்பளம் ரூ.1.05 லட்சத்தில் இருந்து ரூ.1.80 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த சம்பளம் என்பது பல்வேறு வகைகளில் பிரித்து வழங்கப்பட உளளது. தமிழக எம்எல்ஏக்களுக்கு கிடைக்கும் சம்பளம் குறித்த விவரம் வருமாறு:

அடிப்படை சம்பளம் - ரூ.30,000
மாதாந்திரப்படி - ரூ.10,000
தொகுதிப்படி - ரூ.25,000
அஞ்சல்படி - ரூ.2,500
தொலைபேசிப்படி - ரூ.7,500
தொகுப்புப்படி - ரூ.5,000
வாகனப்படி - ரூ.25 ஆயிரமாக இருந்தது. இன்று அதனை முதல்வர் விஜய் ரூ.75 ஆயிரமாக உயர்த்தி உள்ளார்.
உதவியாளர் படி - ரூ.25,000 (இதுவரை உதவியாளர் படி அரசு சார்பில் வழங்கப்பட்டது இல்லை. ஆனால் முதல்வர் விஜய் இன்று உதவியாளருக்காக ரூ.25 ஆயிரத்தை அறிவித்துள்ளார்).

இதன்மூலம் தமிழக எம்எல்ஏக்களின் மாதசம்பளம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்துக்கு 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதுதவிர எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் ஒரு கார் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆண்டுக்கு ரூ.3 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்கப்படும். ஒருவர் 5 ஆண்டு எம்எல்ஏவாக இருக்கும்போது தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.18 கோடி வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+