2 அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த விஜய்.. அமித் ஷா தலைமையிலான தென் மண்டல கவுன்சிலில் இடம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய். தென் மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக தமிழ்நாடு சார்பில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த திமுக ஆட்சி காலத்தில் இருந்த பல்வேறு குழுக்கள், ஆணையங்களின் நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், அமைச்சர்கள் சி.டி.நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Nominates TVK Ministers CTR Nirmalkumar Rajmohan to Southern Zonal Council

தென் மண்டல கவுன்சில்

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு அவ்வப்போது கூட்டுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களும், தலைமைச் செயலர்களும் கலந்து கொள்வார்கள்.

மாநிலங்களுக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்சனைகள், நதிநீர் பங்கீடு, போக்குவரத்து, உள்கட்டமைப்பு வசதிகள், மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற பொதுவான விவகாரங்கள் குறித்து விவாதித்து தீர்வு காண்பது இந்த தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் முக்கிய நோக்கம்.

எல்லை பிரச்சனை

அவ்வப்போது நடைபெறும் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டு அண்டை மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனை தொடர்பாக பேசி தீர்வு காண்பார்கள். பொதுவாக உள்கட்டமைப்பு மேம்பாடு, உள்நாட்டுப் பாதுகாப்பு, எல்லை தொடர்பான விஷயங்கள், நதி நீர் பிரச்சனைகள் உள்ளிட்ட பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் தொடர்பாக இந்த கவுன்சில் கூட்டத்தில் விவாதங்கள் நடத்தப்படும்.

உள்துறை அமைச்சர்

இந்த தென் மண்டல் கவுன்சில் கூட்டத்தின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளார். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், தென்மண்டல கவுன்சில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாகவும், உள்துறை செயலாளர் மணிவாசன் உள்ளிட்டோரை நியமனம் செய்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தென் மண்டல குழு உறுப்பினர்கள்

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யுடன் இணைந்து, எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் மற்றும் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் இந்த குழுவில் தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என அரசிதழ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசகர் நியமனம்

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் எம். சாய்குமாருடன் கூடுதலாக, உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசனையும் தென் மண்டல கவுன்சிலின் இரண்டாவது ஆலோசகராக தமிழக அரசு நியமித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு செய்யப்பட்ட நியமனங்களுக்குப் பதிலாக, 2026 ஜூலை 17 ஆம் தேதியிட்ட அரசாணை மூலம் இந்த நியமனங்கள் அறிவிக்கப்பட்டன. முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இந்த குழுவில் தமிழக பிரதிநிதிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+