சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவிலேயே தமிழகம் சூப்பர் சாதனை... கொரோனா சோதனை செய்வதில் மகாராஷ்டிராவை மிஞ்சி டாப்

Google Oneindia Tamil News

சென்னை: திடீரென மிகஅதிகப்படியான நபர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதே . தமிழகத்தில் சமீபத்திய நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். அதிகப்படியான சோதனை காரணமாகவே தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் அதிகம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கையில் மகாராஷ்டிராவை. தமிழகம் முந்தியுள்ளது. 202,436 மாதிரிகளை தமிழகம் இதுவரை சோதனை செய்துள்ளது, 2வது இடத்தில் உள்ள மகாராஷ்டிரா 202,105 பேரைத்தான் இதுவரை சோதனை செய்துள்ளது.

மகாராஷ்டிராவின் மக்கள்தொகையில் சுமார் 65 சதவிகிதமே உள்ள மாநிலம் தமிழகம் ஆகும். எனவே இத்தகைய சூழலில் அந்த மாநிலத்தை விட அதிக பரிசோதனை செய்திருப்பதால் தமிழகத்தின் சாதனை மிகவும் பாராட்டத்தக்கது. மேலும், மகாராஷ்டிராவின் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டை விட குறைந்தது மூன்று மடங்கு அதிகம் ஆகும்.

அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை வீட்டுக்கு அனுப்புவது ஏன்? விஜயபாஸ்கர் விளக்கம் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை வீட்டுக்கு அனுப்புவது ஏன்? விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழகத்தில் அதிரிப்பு ஏன்

தமிழகத்தில் அதிரிப்பு ஏன்

மகாராஷ்டிரா சோதனைகளின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட அளவிலேயே அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த பத்து நாட்களில் தமிழகம் அதன் சோதனையை மிகமிக அதிக அளவாக அதிகரித்துள்ளது ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையிலான கேஸ்கள் வர இதுவே காரணம் உண்மையில், ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு மேற்கொள்ளப்படும் சோதனைகளில் உள்ள வேறுபாடுகள் இன்னும் வெளிப்படையானவை.

எத்தனை பேருக்கு சோதனை

எத்தனை பேருக்கு சோதனை

தமிழகம் அதன் மக்கள்தொகையில் ஒரு மில்லியனுக்கு 2806 மாதிரிகளை பரிசோதித்திக்கிறது. ஆனால் மகாராஷ்டிரா ஒரு மில்லியனுக்கு 1798 மாதிரிகளை மட்டுமே பரிசோதித்துள்ளது. இதனிடையே தமிழகம் , மாகாராஷ்டிராவைவிட மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட வேறு சில மாநிலங்களில் இந்த அளவு இன்னும் மோசமாக உள்ளன. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசம் ஒரு மில்லியனுக்கு 569 மாதிரிகளை மட்டுமே சோதனை செய்துள்ளது,

உபி மாநிலம் மோசம்

உபி மாநிலம் மோசம்

அதே சமயம் மத்தியப் பிரதேசம் 840 மாதிரிகளை சோதனை செய்துள்ளது. மேற்கு வங்கம் இந்த பட்டியலில் மிக மோசமாக உள்ளது, அதன் மக்கள்தொகையில் ஒரு மில்லியனுக்கு 358 மாதிரிகளை மட்டுமே சோதனை செய்துள்ளது.

தமிழகத்தில் 600 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் 600 பேருக்கு பாதிப்பு

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நாடு முழுவதும் இருந்து 3390 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. 1273 பேர் குணம் அடைந்துள்ளனர். 16540 பேர் குணம் அடைந்துள்ளனர். 37916 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 17974 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 7013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 600 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6009 ஆக அதிகரித்துள்ளது.

English summary
Tamil Nadu now covid 19 tests more people than Maharashtra , tamilnadu tested 202,436 people till yesterday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X