தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று ஆரம்பம்.. 8.20 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்
சென்னை: தமிழகம், புதுவையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் 3.89 லட்சம் மாணவர்களும், 4.30 லட்சம் மாணவிகளும் என மொத்தம் 8.20 லட்சம் மாணவர்கள் 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள். காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வானது 3,302 மையங்களில் 7.94 லட்சம் போ் தேர்வு எழுதினர் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்குகிறது. இன்று தொடங்கும் பிளஸ் 1 பொதுத்தேர்வு வருகிற 25 ஆம் தேதி வரை நடக்கிறது.

முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 8.20 லட்சம் மாணவர்கள் 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள். காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 3,302 தேர்வு மையங்களில் 3.89 லட்சம் மாணவர்களும், 4.30 லட்சம் மாணவிகள் தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
ஒவ்வொரு தேர்விற்கும் போதிய அவகாசம் அளிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிகம் சிரமப்பட வேண்டியது இல்லை. இந்த இடைவெளியை பயன்படுத்தி மாணவர்கள் முறையாக தேர்வுகளுக்கு தயாராக முடியும். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இது போக வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு அறைக்குள் மாணவ மாணவிகள் காப்பி அடிப்பதை தவிர்க்க செல்போன் உள்ளிட்ட மின் சாதன பொருட்களை கொண்டு வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வின் போது பிற மாணவர்களை பார்த்து காப்பி அடிப்பது, தேர்வின் போது ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications