தலைமறைவு! சிக்கலில் மாட்டிக்கொண்ட கஸ்தூரி.. 2 தனிப்படைகள் அமைப்பு.. விரைந்த போலீஸ் அதிகாரிகள்!
சென்னை: முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் நடிகை கஸ்தூரியை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கஸ்தூரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. இதனால் விரைவில் கஸ்தூரி கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
நடிகை கஸ்தூரி வழக்கில் தமிழக அரசு நேற்று முதல்நாள் காரசாரமான வாதங்களை வைத்தது. இதையடுத்து போலீசார் அதற்கு முன் அவரை கைது செய்யும் திட்டத்தில் உள்ளனர். இரண்டு மாநிலங்களுக்கு இடையில் பிரிவுணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாக தமிழக அரசு வாதம் வைத்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கஸ்தூரி மீது பல காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கஸ்தூரி முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அதுவரை கைதில் இருந்து தப்பிக்க தலைமறைவானார் கஸ்தூரி.
நேற்று நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது. தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் தெலுங்கர்கள். சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள்தான், அவர்களை எப்படி பிரித்துப் பேச முடியும் என்று குறிப்பிட்டார். கஸ்தூரி பேசிய காணொளி நீதிபதி முன்பு ஒளிபரப்பப்பட்டது.
அரசுத்தரப்பு: கஸ்தூரி திட்டமிட்டு இப்படி பேசியுள்ளார். முன் ஜாமீன் வழங்கக்கூடாது
நீதிபதி: எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன?
அரசுத்தரப்பு: 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
கஸ்தூரி தரப்பு: குறிப்பிட்ட சமூகத்தினரைக் கொண்டு மட்டும் அந்த கூட்டம் நடக்கவில்லை.
தொடர்ந்து கஸ்தூரி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரியதை தொடர்ந்து விசாரணை சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீதிபதி: குறிப்பிட்ட சமூகப் பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் எனக் குறிப்பிட்டு ஏன் கஸ்தூரி கூறினார்? அதற்கான அவசியம் என்ன?
கஸ்தூரி தரப்பு: தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார். இதற்காக காவல்துறை அவரை தேடத் தேவையில்லை
அரசுத்தரப்பு: கஸ்தூரி திட்டமிட்டு இப்படி பேசியுள்ளார். பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்றே அவர் இப்படி எல்லாம் கூறி உள்ளார்.
நீதிபதி: அவர் பேசியது தேவையற்றது. கற்றவர், சமூக ஆர்வலர் என தன்னைக் கூறும் மனுதாரர் எப்படி இப்படி கருத்தை தெரிவிக்கலாம்?
அந்த வீடியோக்களை பிறர் பார்க்கையில் தேவையற்ற விளைவை ஏற்படுத்தும்தானே?. மன்னிப்பை உணர்ந்து கேட்டதாக தெரியவில்லை. தான் கூறியதை நியாயப்படுத்தும் விரும்புவதாகவே உள்ளது
அரசுத்தரப்பு: கஸ்தூரி சாதாரணமாக பேசவில்லை. இரண்டு மாநிலங்களுக்கு இடையே பிரிவினையையை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இப்படி பேசியுள்ளார். பிரச்சனை ஏற்படுத்த வேண்டும்.. சதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இப்படி எல்லாம் பேசி உள்ளார்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications