மணல் கான்ட்ராக்டர் புதுக்கோட்டை ராமச்சந்திரன் மகன் திருமணம்.. அனைத்து கட்சி தலைவர்களும் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் மணல் கான்ட்ராக்டர்களில் மும்மூர்த்திகளில் ஒருவரான புதுக்கோட்டை ராமச்சந்திரனின் (எஸ்.ஆர். ) இல்லத் திருமண விழா நேற்று புதுக்கோட்டையில் விமர்சியாக நடந்தது. தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியான பொன்னைய்யாவின் மகளை தனது மகனுக்கு மணமுடித்திருக்கிறார் ராமச்சந்திரன். இந்த திருமணவிழாவில் தமிழகத்தின் அத்தனை அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் எந்த மாதிரி அரசியல் நடத்தப்பட வேண்டும் என்பதை புதுக்கோட்டையே தீர்மானிப்பதாக இருந்தது, அரசியல் தலைவர்களின் வருகை.

tamilnadu politics

ஆம்... மணல் காண்ட்ராக்டர் ராமச்சந்திரன் வீட்டுத் திருமண விழாவுக்கு, தி.மு.க.சார்பில் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், திமுக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அதிமுகவில் நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை, எம்.பி.கார்த்தி சிதம்பரம், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், பா.ஜ.க.சார்பில் ஹெச். ராஜா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் T.T.V.தினகரன் என பல தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இப்படி தலைவர்கள் பலரையும் ஒரே நிகழ்ச்சியில் ஒருங்கிணைக்கும் தலைமைத்துவம் புதுக்கோட்டைக்கே உண்டு. அதுவும் மணல் காண்ட்ராக்ட் வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கே இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது புதுக்கோட்டை. இந்த திருமண விழா, தமிழகத்தில் மணல் காண்ட்ராக்டர்களின் செல்வாக்கு எவ்வளவு என்பதை வெளிப்படுத்தியுள்ளது. தி.மு.க., அதிமுக., காங்கிரஸ், பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி என எதிரும் புதிருமாக இருந்த அனைத்து முக்கிய கட்சிகளின் தலைவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டது தமிழக அரசியலில் உன்னிப்பாக பார்க்கப்படும் விஷயமாகியுள்ளது.

இந்த நிலையில், மணல் பிசினெஸ் ஜாம்பவான்கள் மூவருக்குமான ( ரத்தினம், கரிகாலன் மற்றும் எஸ்.ஆர் ) அரசியல் தொடர்புகளை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.பி. ஆகிய மூன்று விசாரணை அமைப்புகளும் கண் கொத்திப்பாம்பாக கவனித்து வருகின்றன. அந்த வகையில், புதுக்கோட்டை ராமச்சந்திரன் வீட்டு திருமண விசேஷத்திற்கு வந்த அரசியல் வி.ஐ.பி.க்கள் அனைவரையும் நோட் பண்ணி டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது மத்திய உளவுத்துறை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+