கடந்த 4 தேர்தல்களில் இந்த முறைதான் குறைந்த அளவு வாக்கு சதவீதம் உயர்வு! டேட்டாவை பாருங்க புரியும்
சென்னை: நடந்து முடிந்துள்ள தமிழக சட்டசபை தேர்தலில் வாக்கு சதவீதம் 85 என்ற அளவை தாண்டியிருந்தாலும், வாக்களித்தவர்களின் உயர்வு என்பது, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவு என புள்ளி விவரங்கள் காட்டியுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில், 4 சட்டசபை தேர்தல்களை ஒப்பிடும் போது இந்த முறை தான் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்து இருக்கிறது தெரியவந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரே கட்டமாக கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் வாக்குசதவீதம் என்பது இதுவரை இல்லாத அளவாக 85.15 சதவீதம் என்று பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. எஸ்.ஐ.ஆர் திருத்த பணி காரணமாக வாக்கு சதவீதம் கடந்த தேர்தல்களிலும் உயர்ந்துள்ளது.

2026-இல் 5.53 சதவீதம் தான் உயர்வு
குறிப்பாக கடந்த 2000 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் திருத்தப்பணிக்கு பிறகு நடந்த 2006 சட்டசபை தேர்தலில் முந்தைய தேர்தலை விட 48 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்தனர். 2001 சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விட 17.24 சதவீதம் அதிகம் ஆகும்.
2025 இல் நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆருக்கு பிறகு, நடைபெற்று முடிந்துள்ள 2026 சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையானது 25 லட்சம் மட்டுமே அதிகரித்துள்ளது. இது முந்தைய தேர்தலோடு வாக்களித்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் 5.53 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
20 ஆண்டுகளில் இதுவே குறைவு
அதே நேரத்தில் 2011 சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை விகிதம் 11.4 சதவீதமும், 2016 சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை விகிதம் 18.5 சதவீதமும், 2021 சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை விகிதம் 6.22 சதவீதமும் உயர்ந்து இருக்கிறது. இப்படி கடந்த 20 ஆண்டுகளில், 4 சட்டசபை தேர்தல்களை ஒப்பிடும் போது இந்த முறை தான் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்து இருக்கிறது தெரியவந்துள்ளது.
சட்டசபை தேர்தல் - 2001
மொத்த வாக்காளர்கள்: 4,74,79,000
பதிவான வாக்குகள்: 2,80,37,314
சதவீதம்: 59.05%
சட்டசபை தேர்தல் - 2006
மொத்த வாக்காளர்கள்: 4,63,61,952
பதிவான வாக்குகள்: 3,27,84,000
சதவீதம்: 70.71%
உயர்ந்த வாக்கு சதவீதம்: 16.9%
சட்டசபை தேர்தல் - 2011
மொத்த வாக்காளர்கள்: 4,71,17,767
பதிவான வாக்குகள்: 3,67,56,813
சதவீதம்: 78.29%
உயர்ந்த வாக்கு சதவீதம்: 11.4%
சட்டசபை தேர்தல் - 2016
மொத்த வாக்காளர்கள்: 5,82,01,687
பதிவான வாக்குகள்: 4,35,59,008
சதவீதம்: 74.84%
உயர்ந்த வாக்கு சதவீதம்: 18.5%
சட்டசபை தேர்தல் - 2021
மொத்த வாக்காளர்கள்: 6,29,43,512
பதிவான வாக்குகள்: 4,62,70,157
சதவீதம்: 73.51%
உயர்ந்த வாக்கு சதவீதம்: 6.22%
சட்டசபை தேர்தல் - 2026
மொத்த வாக்காளர்கள்: 5,73,43,291
பதிவான வாக்குகள்: 4,88,27,812
சதவீதம்: 85.15%
உயர்ந்த வாக்கு சதவீதம்: 5.53%














Click it and Unblock the Notifications