கரண்ட் பில்லை பார்த்தாலே ஷாக்கடிக்குது..வாடகை வீடுகளில் அடிதடி! கொஞ்சம் இந்தப் பக்கமும் பாருங்க சார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின் கட்டணம் பல மடங்கு திடீரென உயர்ந்து இருப்பதால் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வாடகை வீடுகளில் குடியிருப்போர் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பதால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் iஇருக்கின்றனர். மேலும் மின் கட்டணத்தை பகிர்ந்து செலுத்தி வருவோருக்குள்ளும் பிரச்சனைகள் அதிகரித்து வருவது வந்துள்ளதாக சமூக வலைதளங்களில் அதிக புகார்களை பார்க்க முடிகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்து வருகிறது. பொது வெளியில் சமூக வலைதளங்களிலும் இது போன்ற பேச்சுக்களை அதிகம் கேட்க முடிகிறது.

Tamil Nadu Power Bills

வழக்கமாக 700 முதல் 900 ரூபாய் வரும் மின் கட்டணம், தற்போது 4000 முதல் 5000 ரூபாய் வரை வருவதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் 4000 முதல் 5000 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தி வந்த பல வீடுகளில் 10000க்கும் மேல் மின் கட்டணம் அதிகரித்துள்ளது.

மின்கட்டணம்

இதுபோன்ற மின்சார பில் நடுத்தர வர்க்கத்தினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. குறிப்பிட்ட வீடு அல்லது குறிப்பிட்ட நகரங்களுடன் இந்த பிரச்சனை நின்று விடவில்லை. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இது போன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. குறிப்பாக வீடுகள் பூட்டப்பட்டிருந்த நிலையிலும் அதிக அளவு மின்சார பயன்பாடு கணக்கிடப்பட்டு இருப்பது நுகர்வோர்களை அதிர்ச்சியை அடைய வைத்துள்ளது.

மின் மீட்டர் ரீடிங்

பொதுவாக வீடுகளில் மின் மீட்டர் ரீடிங் எடுக்கப்படும்போது நேரடியாக பதிவாகியுள்ள பயன்பாடு கணக்கிடப்பட வேண்டும். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தாலோ அல்லது மீட்டரை பார்க்க முடியாமல் இருந்தாலும் முந்தைய பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தோராயமாக யூனிட்டுகள் கணக்கிடப்படுகின்றன. அடுத்த முறை நேரடி ரீடிங் எடுக்கும்போது ஏற்கனவே கணக்கிடப்பட்ட தோராய யூனிட்டுகளும் சேர்ந்து மொத்த பயன்பாடு அதிகமாக காட்டப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மின்வாரியம்

இதனால் ஒரு மாதத்தில் பயன்படுத்திய மின்சாரத்திற்கான மின் கட்டணம் மட்டுமின்றி முந்தைய காலகட்டத்தில் சரியாக கணக்கிடப்படாத பயன்பாடும் சேர்த்து ஒரே நேரத்தில் பில் வரலாம் என்கின்றனர். மின்வாரிய அதிகாரிகள். இதுபோன்ற கணக்கிட்டு குளறுபடிகளால் சில வீடுகளுக்கு வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மின் பகிர்மான கழகம்

இதற்கு இன்னொரு முக்கிய பிரச்சனையும் சுட்டிக்காட்டப்படுகிறது. தமிழக மின் பகிர்மான கழகத்தில் கணக்கீட்டாளர் பணியிடங்களில் சுமார் 60% பணியிடங்களும். ஆய்வாளர் பணியிடங்களில் சுமார் 42% பணியிடங்களும் காலியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில் அனைத்து வீடுகளுக்கும் சரியான நேரத்தில் ரீடிங் இருப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் தோராய கணக்கீடு மூலம் பலருக்கு அதிக பில் வந்திருக்கலாம் என்கின்றனர்.

மின் கட்டண உயர்வு

அது மட்டும் அல்லாமல் மின்மீட்டர்களில் ஏற்பட்ட பழுதுகளும் நுகர்வோர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மின் மீட்டர்கள் சரியாக செயல்படாத நிலையில் அதிக பயன்பாடு பதிவானால் அதை சரி செய்வதற்காக நுகர்வோர் மின்வாரிய அலுவலகத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மின்கட்டணம் வசூலிக்கப்படுவதில் ஏற்படுத்தப்படும் அடுக்கு முறையும் குழப்பமாகவே இருக்கிறது.

இலவச மின்சாரம்

அதாவது குறிப்பிட்ட அளவை தாண்டியதும் ஒவ்வொரு யூனிட்டுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது/ உதாரணமாக 100 யூனிட் வரை முன்பு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில். தற்போது 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை அடுக்குக்கு ஏற்றவாறு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால்தான் பலருக்கும் ஆயிரக்கணக்கில் மின்கட்டணம் வந்துள்ளதாக சொல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+