பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்கியது: தேர்வு எழுதும் 8 லட்சம் மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3 ஆம் தேதி) தொடங்கியது. தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 8.21 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்கியது. இந்த தேர்வு மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வை மாணவர்கள் எழுதுவதற்காக தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,518 பள்ளிகளைச் சேர்ந்த 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

Tamilnadu Plus 2 public exam 2

தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 43 ஆயிரத்து 446 ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 154 வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாவட்ட ஆட்சியர், முதன்மை, வட்டார கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக் பொருள்கள் மற்றும் செல்போன் போன்ற மின்சாதனங்களை கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கும் தேர்வறையில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் தேர்வர்கள், ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மின்சாரத் துறைக்கும், தேர்வு பணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட காவல் துறைக்கும், அடிப்படை வசதிகளை செய்துதர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தேர்வு தொடர்பான ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் அதனை அறிந்து கொள்ளும் வகையில், முழு நேர தேர்வு கட்டுப்பாட்டு அறை (9498383075, 9498383076) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளது.

விடைத்தாள்களில் தேர்வு எண், பெயர், சிறப்பு குறியீடுகள் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது. மாணவரின் புகைப்படம், பதிவெண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.

தேர்வு நேரங்களில் தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் குற்றங்களுக்கு தக்கவாறு தண்டனைகள் வழங்கப்படும். ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க பள்ளிக்கல்வி துறையின் '14417' என்ற இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+