தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்
சென்னை : வடகிழக்கு பருவக் காற்று காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் மழை பெய்யும் இடங்கள் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் டிசம்பர் 16ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் இடங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

டிச.12 முதல் 14 வரை
வடகிழக்கு பருவக் காற்று காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்து 5 நாட்களுக்கு மழை பெய்யும் இடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 12ம் தேதியான இன்று தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 13 மற்றும் 14ம் தேதிகளில் இன்று போலவே தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது

டிச.15 மற்றும் 16
மேலும் டிசம்பர் 15ம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 15ம் தேதி அன்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 32 டிகிரி செல்ஸியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

மழை பெய்த அளவு
கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை செய்யார் 7, மகாபலிபுரம் 6, காட்டுமன்னார்கோயில் 5, திருமானுர், சமயபுரம், திருக்காட்டுப்பள்ளி , வந்தவாசி தலா 4, கொள்ளிடம், உத்திரமேரூர், அரிமலம் , ஜெயம்கொண்டாம், சீர்காழி, திருப்பத்தூர் (சிவகங்கை) தலா 3, ஆரணி, திருவண்ணாமலை, திருவையாறு, தாம்பரம் , பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், குன்னூர் , கரம்பக்குடி தலா 2, சென்னை விமான நிலையம், வேதாரண்யம், சிவகாசி தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்றைய நிலவரப்படி மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications