தமிழகம், புதுச்சேரியில் மீண்டும் மழை... எங்கெங்கு தெரியுமா?
சென்னை : வடகிழக்கு பருவக் காற்று காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் மழை பெய்யும் இடங்கள் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இன்று முதல் டிசம்பர் 15ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் இடங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

டிச.11 மற்றும் 12ல் மழை
வடகிழக்கு பருவக் காற்று காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்து 5 நாட்களுக்கு மழை பெய்யும் இடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 11ம் தேதியான இன்று தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், டிசம்பர் 13ம் தேதி தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது

டிச.14 மற்றும் 15ல் மழை
மேலும் டிசம்பர் 14ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், டிசம்பர் 15ம் தேதி தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. அதே சமயம் ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 32 டிகிரி செல்ஸியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்த அளவு
கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூரில் 2 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம், தாம்பரம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்றைய நிலவரப்படி மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications