வெளுத்து வாங்கும் கனமழை.. இன்று மேஜர் மீட்டிங்.. செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் முதல்வர் விஜய்!
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் இன்று காலை தலைமைச் செயலகத்தில் மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். இன்று மதியம் செம்பரம்பாக்கம் ஏரியை அவர் பார்வையிட திட்டமிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிடுகிறார் முதலமைச்சர் விஜய். மொத்த கொள்ளளவான 24 அடியில் தற்போது 14.76 அடியாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உள்ளது.

ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3.645 டிஎம்சி-யில், தற்போது 1.488 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் நீர் இருப்பு மற்றும் நீர்மட்டம் தொடர்பான விவரங்கள் பொதுமக்கள் மற்றும் குடிநீர் விநியோகத் தேவைகளின் அடிப்படையில் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 150 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் வரத்து முழுவதும் மழையால் உருவாகும் நீரோட்டத்தின் மூலம் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 208 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில், சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக 176 கன அடி நீரும், சிப்காட் தேவைக்காக 5 கனஅடி நீரும், பாசனத்திற்காக 2 கனஅடி நீரும் ஒதுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
