எகிறி அடித்த தமிழ்நாடு.. ஸ்டார்ட் அப் துறையில் டாப் இடம் நமக்கு தான்! இது என்ன லிஸ்ட்லயே இல்லையே
சென்னை: ஸ்டார்ட்அப் இந்தியா ரேங்கிங் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், இதில் தமிழ்நாடு பெஸ்ட் பெர்மானஸ் மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
இந்தியா இப்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நமது நாட்டின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களே காரணமாக இருக்கும்.

தமிழ்நாடு அரசும் கூட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கிடையே ஸ்டார்ட்அப் இந்தியா ரேங்கிங் வெளியிடப்பட்டது.
பெஸ்ட் பர்பார்மென்ஸ்: அதில் 2022 ஆம் ஆண்டிற்கான லிஸ்டில் பெஸ்ட் பர்பார்மென்ஸ் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. 2018 மற்றும் 2019ஆம் தமிழ்நாடு மிக மோசமான இடத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு இந்த ரேங்கிங்கில் தமிழ்நாடு வேகமாக முன்னுக்கு வந்தது.
இப்போது சிறந்த ஸ்டார்ட் அப் சூழலைக் கொண்டுள்ளதால் இந்த லிஸ்டில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது. 2022இல் ஸ்டார்ட் அப் சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு இப்போது இந்த இடத்தை எட்டியுள்ளது. இந்த லிஸ்டில் குஜராத், கர்நாடகா, கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களும் சிறந்த செயல்திறன் கொண்டவையாகத் தேர்வு செய்யப்பட்டன.
தமிழ்நாடு அரசு: தமிழ்நாடு அதன் நோடல் ஸ்டார்ட்அப் ஏஜென்சியான ஸ்டார்ட்அப் தமிழ்நாடு என்ற அமைப்பை 2021இல் புதுப்பித்தது. மேலும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் விதை நிதி (TANSEED) தொடங்கிப் பல நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு அரசு தனது பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்தது. இதுவே வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டில் இதுவரை 7,600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 2250 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 2022இல் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து StartupTN சிஇஓ சிவராஜா கூறுகையில், "புதிய நிதி ஒதுக்கீடுகள் செய்வது, தொழில்முனைவோரை முதலீட்டாளர்களுடன் இணைக்க நெட்வொர்க்குகள் உருவாக்குவது, சர்வதேச தொடர்பு எனப் பல நடவடிக்கைகளை எடுத்தோம். இது நல்ல பலனைக் கொடுத்துள்ளது. மேலும், புதிய ஸ்டார்ட் அப் கொள்கையை 2023 வெளியிட்டு இருந்தாலும் அதில் உள்ள பெரும்பாலான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே செய்து வருகிறோம்,
என்ன காரணம்: இதுவே ரேங்கில் நாங்கள் முன்னேறக் காரணமாகும்.. தொடர்ச்சியாக நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். இதன் மூலம் 2032ஆம் ஆண்டிற்குள் சர்வதேச அளவில் ஸ்டார்அப் நிறுவனங்கள் விரும்பும் இடங்களில் ஒன்றாக மாறுவோம். ஸ்டார்ட்அப்களுக்கு தேவையான ஆதரவு, நிதியுதவி, தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகிய மூன்று துறைகளில் தமிழ்நாடு 100 சதவீதம் உயர்ந்துள்ளது" என்றார்.
புதுமைகளை வளர்ப்பதில் தமிழ்நாடு 79வது இடத்தில் இருக்கிறது.. சந்தை அணுகல் பிரிவில் 64வது இடத்தையும், நிலைத்தன்மைக்கான திட்ட ரேங்கில் 75வது இடத்தையும் பெற்றுள்ளது. மேலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ₹15 கோடிக்கு மேல் மதிப்புள்ள 60க்கும் மேற்பட்ட பணி ஆணைகளைத் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
அதேபோல தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவு பொருட்கள் மற்றும் சேவைகளைக் கட்டாயம் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப்களில் இருந்து கொள்முதல் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோல தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications