ரேஷன் கடையில் இனி வங்கி சேவை.. கணக்கு தொடங்கினால் ஊக்க தொகை.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: ரேஷன் கடைகளில் வங்கி சேவைகளை பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ரேஷன் கடைகளின் வாயிலாக வங்கி சேவைகளை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
கூட்டுறவு சங்கத்தால் செயல்படுத்தப்படும் ரேஷன் கடைகளில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் வழங்கும் சேவைகள் வழங்கப்பட உள்ளது. ரேஷன் கடைகள் மூலமாக மத்திய கூட்டுறவு வங்கிகளில், சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம். ஒரு கணக்குக்கு ₹5 ஊக்கத்தொகையாக வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது போக விரைவில் ரேஷனில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆவின் பால் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறிய வகை பாக்கெட்டுகளில் ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது என்று பால் வளத்துறை தெரிவித்துள்ளது.
ரேஷனில் என்ன மாதிரியான ஆவின் பொருட்கள் கிடைக்கும் என்று விரைவில் லிஸ்ட் வெளியாகும். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, எண்ணெய் மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தும் ஸ்டாக் நிரப்பப்பட்டு உள்ளது. கடந்த சில வாரங்களாக தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் மீண்டும் ஸ்டாக் கொண்டு வரப்பட்டு உள்ளது.
தட்டுப்பாடு நீக்கப்பட்டு உள்ளது. 10 சதவிகித கடைகளில் மட்டுமே தற்போது தட்டுப்பாடு உள்ளது. விரைவில் அதுவும் சரி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமோலின் ஆயில் ஆகியன தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை அங்காடிகளின் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
அரிசி திருட்டு: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் -1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நடவடிக்கை; தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி விற்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பாக முக்கியமான சில தகவல்களை வெளியிட்டு உள்ளது. இதை தடுப்பதற்காக முக்கியமான திட்டம் ஒன்றையும் கையில் எடுத்துள்ளது.
இதற்காக இனி ஜிபிஎஸ் உடன் கூடிய இ-வழித்தடம் அமைக்கப்படும். இந்த வழித்தடத்தில் மட்டும் வாகனங்கள் செல்ல வேண்டும். வாகனங்கள் கண்காணிப்பு, ஜிபிஎஸ் மூலம் செயல்படுத்தப்படும் லாக் உள்ளிட்ட வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications