ரெட் அலர்ட்.. “மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு ரெடியா இருக்கு”.. உறுதியாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: மழையை எதிர்பார்க்கிறோமோ இல்லையோ.. நாங்க எதிர்கொள்ளத் தயாரா இருக்கிறோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு நாளை, நாளை மறுநாள் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை கண்ணகி நகரில் 'விழுதுகள்’ சேவை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகள் வழங்க அமைக்கப்பட்ட விழுதுகள் சேவை மையம் திறந்துவைக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் தொடர்பான மறுவாழ்வு சேவைகள் வழங்க இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.3.08 கோடியில் விழுதுகள் சேவை மையம் சீரமைக்கப்பட்ட நிலையில் அது திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது, வானிலை எச்சரிக்கை தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்தார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை எதிர்பார்க்கப்படுகிறது, தமிழக அரசு தயாராக இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “மழை வருகிறது என எதிர்பார்க்கிறோமோ இல்லையோ, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன . உரிய பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டல வாரியாக தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதன் காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் (நவம்பர் 26, 27) ஆகிய 2 நாட்கள் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12 முதல் 20 செ.மீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications