இதே வேகத்தில் போனால்.. 6 வருடங்களில் மகாராஷ்டிராவையே தமிழ்நாடு முந்திவிடும்.. அசாத்திய வளர்ச்சி
சென்னை: தமிழ்நாடு மீண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. இதே வேகத்தில் செல்லும் பட்சத்தில் அடுத்த 6 ஆண்டுகளில் தமிழ்நாடு மகாராஷ்டிராவை ஜிடிபியில் முந்தும்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு மீண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19% ஆக இருக்கும் என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதாவது தமிழ்நாடு அரசு கணித்த 9 சதவிகித வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்து சாதனை படைக்க உள்ளது.
தமிழ்நாடு வளர்ச்சி - ஸ்டாலின் நம்பிக்கை
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில், இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் #DravidianModel அரசு! 🔝 இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா... 📈 அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது!

🌄 இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி! இரண்டுமே கழக ஆட்சி! 👑 2030-ஆம் ஆண்டுக்குள் #OneTrillionDollar பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. "இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?" என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது! 😎 எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666), என்று குறிப்பிட்டு உள்ளார்.
மகாராஷ்டிராவை முந்தும்
தமிழ்நாடு மீண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. இதே வேகத்தில் செல்லும் பட்சத்தில் அடுத்த 6 ஆண்டுகளில் தமிழ்நாடு மகாராஷ்டிராவை ஜிடிபியில் முந்தும். அதாவது 6 ஆண்டுகளில் தமிழ்நாடு 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும். அதேபோல் மகாராஷ்டிரா இப்போது உள்ள பொருளாதார வேகத்தில் வளர்ந்தால்.. 7 ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர் வளர்ச்சியை அடையும். இதன் மூலம் 6 வருடங்களில் தமிழ்நாடு மகாராஷ்டிராவை முந்தும்.
மத்திய அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் சில மாநிலங்களின் வளர்ச்சி விகிதங்கள்: உத்தரப் பிரதேசம் - 8.99%, ஆந்திரப் பிரதேசம் - 8.21%, தெலங்கானா - 8.08%, கர்நாடகா - 7.37%, மகாராஷ்டிரா - 7.27%.
இதன் மூலம் வளர்ச்சி சதவிகிதத்தில் தமிழ்நாடு நம்பர் 1 இடத்தை அடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கடந்த 2010-11 நிதியாண்டில் தமிழ்நாடு 13.12% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. அதன்பின் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்யவே இல்லை. இப்போது மீண்டும் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த இரண்டு முறையும் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) ஆட்சியில் இருந்தது. ஆகஸ்ட் 1, 2025 நிலவரப்படி, இந்த திருத்தப்பட்ட மதிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு வளர்ச்சி
முன்னதாக, 2004-05 ஆம் ஆண்டு அடிப்படை ஆண்டாகக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்போது 2011-12 ஆம் ஆண்டு அடிப்படை ஆண்டாகக் கொள்ளப்பட்டுள்ளது. சென்னை பொருளாதாரப் பள்ளியின் முன்னாள் இயக்குநர் கே.ஆர். சண்முகம், சேவை மற்றும் இரண்டாம் நிலைத் துறைகளின் சிறப்பான செயல்பாடே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று குறிப்பிட்டார். சுமார் ஐந்து மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட மாநில வாரியான முன்கூட்டிய மதிப்பீடுகளில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 9.69% ஆக இருந்தது. தற்போது இது சுமார் 1.5 சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளது.
இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதன் மூலம், தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. வேறு எந்த மாநிலமும் இதே இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. கோவா, குஜராத் மற்றும் நான்கு வடகிழக்கு மாநிலங்கள் உட்பட ஆறு மாநிலங்களின் தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பட்ஜெட் - வளர்ச்சி உச்சம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் கணிக்கப்பட்ட வளர்ச்சியை விட உண்மையான வளர்ச்சி அதிகமாக உள்ளது. பட்ஜெட்டில் மாநிலத்தின் பெயரளவு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 14.5% ஆகவும், உண்மையான வளர்ச்சி 9% ஆகவும், சராசரி பணவீக்கம் 5% ஆகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
ஆனால், தற்போதைய உண்மையான வளர்ச்சி பட்ஜெட் மதிப்பீட்டை விட சுமார் 2.2% அதிகமாக உள்ளது. நிலையான விலைகளில் (அடிப்படை ஆண்டு: 2011-12), 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ₹17,32,189 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023-24 நிதியாண்டில் ₹15,57,821 கோடியாக இருந்தது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications