தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்.. குறைந்தது பலி எண்ணிக்கை.. அதிகரித்த டிஸ்சார்ஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 5,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,19,860 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்த மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 46 ஆயிரம் என்கிற அளவில் குறைந்துள்ளது. பல மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. குணம் அடைந்து வீடுதிரும்புவோர் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 5,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,19,860 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,768 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,64,668 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1029 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 707 பேரும், கடலூரில் 400 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 8,559 பேர் பலி

இதுவரை 8,559 பேர் பலி

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 57 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 8,559 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 14 பேர் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை, சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 5 பேரும், செங்கல்பட்டு மற்றும் கோவையில் தலா 4 பேரும் பலியாகி உள்ளனர்.

பரிசோதனை அதிகம்

பரிசோதனை அதிகம்

தமிழகத்தில் இன்று 84,567 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 61,33,399 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 82,644 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 59,40,944 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 46,633 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

எவ்வளவு பாதிப்பு

எவ்வளவு பாதிப்பு

மாவட்ட நிலவரத்தை பார்த்தால் வழக்கம் போல் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 983 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 151,560 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் 9833 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக கோவையில் இன்று 549 பேரும், செங்கல்பட்டில் 319 பேரும், திருவள்ளூரில் 282 பேரும், சேலத்தில் 280 பேரும், கடலூரில் 263 பேரும், திருவண்ணாமலையில் 156 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+