காலாண்டு - அரையாண்டு - முழு ஆண்டு தேர்வு தேதி அறிவிப்பு.. விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா? லிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் காலாண்டு, அரையாண்டு தேர்வு மற்றும் முழுஆண்டு தேர்வுக்கான தேதி மற்றும் விடுமுறை நாட்களை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி கல்வித்துறையின் 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியிடப்பட்ட நிலையில் தேர்வு மற்றும் பொங்கல் விடுமுறை பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த 2 ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆர்வமாக பள்ளிகள் சென்று வருகின்றனர்.

இதற்கிடையே தான் இன்று பள்ளி கல்வியின் 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* வாரத்தில் 2 விளையாட்டு வகுப்புகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
* 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகளுடன் புதிதாக Easy English, Fun with maths வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
* 6-8 ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழி ஆய்வகம், நூலகம், கல்வி சார் செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகளுக்கு பாடவகுப்புகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
* மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி, உடல் நல மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், கலையரங்கம், வாய்ப்பாட்டு, நடனம் ஆகியவற்றில் கல்வி சாரா செயல்பாடுகளில் பாடவகுப்புகள் ஒதுக்கட வேண்டும்.
* 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நீதி போதனை, மதிப்புக் கல்வி, மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் ஆகியவற்றிற்கு பாட வகுப்புகள் ஒதுக்கிட வேண்டும்.
* மனநல மற்றும் வாழ்வியல் திறன் பாடல் வகுப்புகளில் மாணவர்கள் அவர்களை குறித்து எழுதுதல், கவனம் குவித்தல், ஸ்மார்ட் இலக்குகள், உன்னை அறிந்தால் என மாணவர்களின் நலன் சார்ந்த பாடங்களை எடுக்க வேண்டும்.
* 2025-26ம் கல்வியாண்டின் மொத்த வேலை நாட்கள் 210.
* அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை விடப்படுகிறது.
* செப்டம்பர் 18 முதல் 26ம் தேதி காலாண்டு தேர்வு நடைபெறும்.
* செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது. காலாண்டு விடுமுறையிலேயே ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறைகளும் அடங்கும்.
* டிசம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும்.
* டிசம்பர் 24ல் இருந்து ஜனவரி 5ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும். இந்த விடுமுறை மொத்தம் 12 நாட்களாகும்.
* 2026 ஜனவரி 14 (புதன்) முதல் ஜனவரி 18 ம் தேதி வரை பொங்கல் விடுமுறை விடப்படுகிறது.
* 2026 பிப்ரவரி 1ம் தேதி தைப்பூச நாள் விடுமுறை வழங்கப்படுகிறது.
* 10.4.2026 முழு ஆண்டு தேர்வு தொடங்கும். 24.04.2026 பள்ளியின் கடைசி வேலை நாட்களாகும்.
* 25.04.2026 முதல் அடுத்த ஆண்டிற்கான கோடை விடுமுறை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும். ஆனால் இந்த முறை அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இருப்பினும் ஏதேனும் உள்ளூர் விடுமுறை மற்றும் இயற்கை பேரிடரால் வழங்கப்படும் விடுமுறை உள்ளிட்டவற்றை சரிசெய்ய சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படலாம். இதுபற்றி அந்தந்த சமயத்தில் அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications