மாணவர்களுக்கு வந்த அதிரடி.. அரையாண்டு தேர்வு அட்டவணை வந்தாச்சு.. தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி
சென்னை: தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுக்கான பொதுவினாத்தாள் முறை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. இதன் மூலம் வருட இறுதியில் மட்டுமல்லாது மாணவர்களுக்கு எல்லா தேர்வும் பொதுத்தேர்வு போலவே நடைபெறுவதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

காலாண்டு தேர்வு: இந்தவகையில், 2023 - 24ம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் நடந்து முடிந்தது.. அதுபோலவே, 11, 12ம் வகுப்புகளுக்கு மற்றும் 6 முதல் 10ம் வகுப்புகளுக்கும் செப்டம்பரில் காலாண்டு தேர்வுகள் நடந்து முடிந்தன. நடந்து முடிந்த தேர்தல்களில், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட்டது.
6 முதல் எஸ்எஸ்எல்சி மாணவ - மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு அடுத்த மாதம் நடக்க போகிறது.. டிசம்பர் 11-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் நடைபெற போகிறது. 11-ம் வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், 12-ம் வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும்.
உடற்கல்வி தேர்வு: இதில் டிசம்பர் 11-ல் தமிழ், 12-ல் விருப்ப மொழி, 13-ல் ஆங்கிலம், 15-ல் அறிவியல், 18-ல் கணிதம், 20-ல் சமூக அறிவியல் மற்றும் 21-ம் தேதி உடற்கல்வி தேர்வுகள் நடைபெற உள்ளன.
6, 7, 8-ம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் மதியம் 12.30 மணி வரையும், 9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள்: எனவே, தேர்வுக்கு முந்தைய நாளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் 14417 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு அதுபற்றி பதிவு செய்யவேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, அரையாண்டு தேர்வுகள் முடிந்து, டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் வரும் 2024 ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. இதன்காரணமாக, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குவதற்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம்.
-
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்!












Click it and Unblock the Notifications