Diwali 2025: தமிழக பள்ளிகளுக்கு தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? காலண்டரையே பார்க்கும் மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை நாட்கள் குறித்த தகவல்கள் வெளியானதால் அவர்கள் குஷியில் உள்ளனர். தமிழகத்தில் எத்தனை நாட்கள் தீபாவளிக்கு விடுமுறை என்பதை பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அது போல் வெளிநாடு வாழ் இந்தியர்களும் கொண்டாடி மகிழ்கிறார்கள். கொண்டாட்டம், புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் என ஒரு பக்கம் சிறுவர்களுக்கு குஷி இருந்தாலும், மறுபுறம் விடுமுறையும் இருப்பதால் அவர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி என்றே சொல்லலாம்.

diwali tamil nadu schools

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலம். இதனால் மழை தீவிரமடைந்தால் அதற்கு வேறு விடுமுறை கிடைக்கும். அதிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேட்கவே வேண்டாம்!

தமிழகம் முழுவதும் தொடக்க பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் முடிந்து ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த மாதத்தில் ஒரு பண்டிகையும் இல்லாததால் வார விடுமுறையை தவிர அவர்களுக்கு விடுமுறையே கிடைக்கவில்லை.

ஜூலை மாதமும் மாணவர்களுக்கு சோதனை காலமாகவே இருந்தது. மொஹரம் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமை வந்ததால் பள்ளி மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சனி, ஞாயிறு வார விடுமுறை என மொத்தமாக பார்த்தால் ஜூலை மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை கிடைத்தது.

பின்னர் ஆகஸ்ட் மாதம் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக அமைந்தது. சுதந்திர தின விழா, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி என கூடுதல் விடுமுறை கிடைத்தது. இதனால் மாணவர்கள் கொண்டாட்டம் அடைந்தனர். அடுத்தது இந்த மாதம் செப்டம்பர் மாதம், இதில் கடந்த 5 ஆம் தேதி ஹோலி பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அது வெள்ளிக்கிழமை என்பதால் சனி, ஞாயிறுடன் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் நிறைய பண்டிகைகள் வருகின்றன என்பதால் விடுமுறைக்கு பஞ்சமே இல்லை. அக்டோபர் 1, 2 ஆகிய தினங்கள் சரஸ்வதி பூஜை, விஜயதசமி வருகிறது. இவை புதன், வியாழன் வருகிறது, வெள்ளிக்கிழமையும் சேர்த்து விடுமுறை எடுத்தால் 5 நாட்கள் சொளையாக கிடைக்கும்.

அது போல் அக்டோபர் மாதமே தீபாவளி பண்டிகையும் வருகிறது. இது அக்டோபர் 20ஆம் தேதி திங்கள்கிழமை வருகிறது. அதற்கு மறுநாள் நோன்பு என்பதால் அன்றைய தினமும் விடுமுறை அறிவித்தால் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். புதன்கிழமையும் விடுமுறை கேட்டு கோரிக்கைகளும் எழும். பூஜை விடுமுறைக்கு முன்னர் ஒரு வாரத்திற்கு காலாண்டு விடுமுறையும் வருகிறது. இதனால் மாணவர்கள் பயங்கர குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+