காலாண்டு விடுமுறை நிறைவு.. இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு! மதுராந்தகம், தாராபுரம் நிலவரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை நிறைவடைந்த நிலையில், இன்று அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்படும் நாளான இன்று ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இடைத்தேர்தல் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு உட்பட்ட பள்ளிகள் அக்டோபர் 7 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளன.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மாநில பாடத்திட்டத்தின் கீழ் 1 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை படிக்கும் மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

Schools Reopen Holiday School Education

நேற்றுடன் விடுமுறை நிறைவடைந்து நிலையில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளிகளில் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றன.

அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் இன்று வழங்கப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே செய்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பள்ளியில் திறக்கப்படும் நிலையில் இரண்டு தொகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது அக்டோபர் 6ம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்குள் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 5ஆம் தேதியான இன்றும், தேர்தல் நடைபெறும் நாளான நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் அனைத்தும் 6ஆம் தேதி மட்டும் விடுமுறை அறிவித்துள்ள நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதன் காரணமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்குள் பள்ளிகள் அக்டோபர் 7ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+