காலை உணவு திட்டம்! முதலில் ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்க்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் போது அதன் சுவையையும் தரத்தையும் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று முன் தினம் காலை, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரவா கிச்சடியில் பல்லி செத்து கிடந்தது. இந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

breakfast scheme joseph vijay

இந்த விவகாரத்தில் சமையலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: காலை உணவை சமைக்கும் சமையலறையில் சமையலுக்கான பொருட்களை தவிர பிற பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

சமையலறை தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். சமையல் பாத்திரங்கள், உணவு பரிமாறு பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சமைத்த உணவை மாணவர்களுக்கு பரிமாறுவதற்கு முன், அந்த உணவு தரமானதா என ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்த்து உறுதி செய்ய வேண்டும்.

சமையல் செய்யும் போதும் சமைத்த பின்னும் பரிமாறுவதற்கு பிற பாத்திரங்களில் உணவை மாற்றிய பின்பும், மூடி வைத்த நிலையில் உணவு பாதுகாப்புடன் இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு உணவு பரிமாறும் பணியை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

இடைநிற்றல் இல்லாத தொடர்ச்சியான கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஸ்டாலின் முதல்வரின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிக் கூடங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 19 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தவெக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை நடுநிலை பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்ய முதல்வர் விஜய் விரும்பினார்.

அந்த வகையில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்தால் கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.

இந்த திட்டம் கடந்த 17ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் முதல்வர், தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றதால் அந்த திட்டமானது கடந்த 22 ஆம் தேதி தொடங்கப்பட்டது. சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாணவர்களுடன் அமர்ந்து அவரும் சாப்பிட்டார். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 44,984 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 34 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள். இதற்காக ரூ 217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதால் அந்த இரு தொகுதிகளை தவிர மற்ற இடங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+