வாக்குப்பதிவில் தமிழகம் புது சாதனை.. 2021, 2016ல் எவ்வளவு பேர் வாக்களித்தனர் தெரியுமா? ஒப்பீடு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 82.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்நிலையில் தான் 2021, 2016ம் ஆண்டில் தமிழகத்தில் எவ்வளவு வாக்கு சதவீதம் பதிவாகி உள்ளது? மொத்த வாக்காளர்களில் எவ்வளவு பேர் வாக்களித்தனர்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. அமைதியான முறையில் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 85.15 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
புதிய சாதனை
இது முந்தைய தேர்தல்களை விட அதிகமாகும். தமிழகத்தில் தற்போது 5 கோடி 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் ஓட்டளிக்க உள்ளனர். இதில் 4.71 கோடி பேருக்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் 78.01 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது. அதுதான் அதிகப்பட்சமான ஓட்டு சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்றைய தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இன்னும் அதிகரிக்க வாய்ப்பு
மேலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரங்கள் இன்னும் வரவில்லை. அதன்படி பார்த்தால் வாக்கு சதவீதம் இன்னும் அதிகரிக்கும். இந்நிலையில் தான் கடந்த 2021 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் மொத்த வாக்காளர்கள் எவ்வளவு பேர்? அதில் எத்தனை பேர் ஓட்டளித்தனர்? வாக்குப்பதிவு சதவீதம் என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
2021 சட்டசபை தேர்தல் நிலவரம்
முன்னதாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 693 ஆக இருந்தது. இதில் மொத்தம் 73.63 சதவீதம் என்ற வகையில் ஓட்டுப்பதிவானது. அதாவது மொத்த வாக்காளர்களில் 4 கோடியே 63 லட்சத்து 44 ஆயிரத்து 590 வாக்காளர்கள் வாக்களித்தனர். 1 கோடியே 65 ஆயிரத்து 99 ஆயிரத்து 103 வாக்காளர்கள் (26.37) ஓட்டுப்போடவில்லை. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
2016 சட்டசபை தேர்தல் நிலவரம்
அதற்கு முன்பாக 2016 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில மொத்தம் 5 கோடியோ 82 லட்சத்த 60 ஆயிரத்து 506 வாக்காளர்கள் இருந்தனர். இதில் 74.81 சதவீதம் வரை வாக்கு பதிவானது. அதாவது மொத்தம் 4 கோடியே 35 லட்சத்து 85 ஆயிரத்து 691 பேர் ஓட்டு போட்டனர். 1 கோடியே 46 லட்சத்து 74 ஆயிரத்து 574 வாக்காளர்கள் (25.19 சதவீதம்) வாக்களிக்கப்பட்டன. இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications