விஜய் சூப்பர் ஆக்சன்.. இதுக்குத்தான் சிங்கப்பெண் படை தேவை.. சத்தமின்றி நடந்த தரமான சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதுகாப்பு பணியை வலுப்படுத்தவும் தமிழ்நாடு காவல்துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சமீபத்தில் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் சிங்கப்பெண் படை மூலம் கடந்த ஒரு வாரமாக நடத்தப்பட்ட தீவிர நடவடிக்கை பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, அவசர கால புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பது மற்றும் விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொள்வது என இந்தச் சிறப்புப் படை குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Singapenn Force

7 நாட்களில் 346 புகார்களுக்கு உடனடித் தீர்வு

காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை கடந்த ஏழு நாட்களில் மட்டும் 346 புகார்களுக்குத் தீர்வு கண்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான பலதரப்பட்ட புகார்களை இந்த சிறப்பு படை விரைவாக கையாண்டுள்ளது.

புகார்தாரர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை மற்றும் உடனடி நடவடிக்கைகள் மூலம் பெரும்பாலான புகார்கள் தீர்க்கப்பட்டபோதிலும், கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் சட்டமீறல்கள் நிலவிய 28 வழக்குகளில் முறையான குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

20 பேர் மீட்பு: குடும்பங்களுடன் இணைப்பு

பாதிக்கப்பட்டோரை உடனடியாக மீட்பதும், அவர்களை மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ப்பதும் இந்த நடவடிக்கையின் முதன்மை இலக்குகளில் ஒன்றாக அமைந்தது. தமிழ்நாடு முழுவதும் பிற உள்ளூர் காவல் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்ட 'சிங்கப்பெண்' படையினர், காணாமல் போன 20 நபர்களை விரைவாகக் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 14 குழந்தைகளும் 6 பெண்களும் அடங்குவர். பல நாட்களாகக் காணாமல் போயிருந்த தங்களது உறவினர்களை மீட்டெடுத்ததன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள பல குடும்பங்களுக்கு இந்த சிறப்புப் படை நீண்டநாட்களுக்குப் பிறகு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் மீட்டுத் தந்துள்ளது.

விழிப்புணர்வு

வழக்கமான குற்றத் தடுப்புப் பணிகளிலிருந்து 'சிங்கப்பெண்' சிறப்புப் படையை வேறுபடுத்திக் காட்டுவது அதன் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஆகும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அடித்தட்டு வரை கொண்டு செல்வதன் மூலமே குற்றங்களைக் குறைக்க முடியும் என்பதை உணர்ந்து, ஒரே வாரத்தில் 3,580 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களும், பெண்களும் அதிகம் கூடும் இடங்களில் இந்த சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டன:

பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்ட சிங்கப்பெண் படையின் நிகழ்வுகள் மூலம் மாணவர்களுக்குத் பாதுகாப்பு, சட்ட உரிமைகள், டிஜிட்டல் இணையப் பாதுகாப்பு மற்றும் அவசரகால உதவி எண்கள் குறித்து தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் அவசர காலத்தில் காவல்துறையை எப்படித் தொடர்பு கொள்வது என்பது குறித்து பிரசாரம் செய்யப்பட்டது.

தொழிற்பேட்டைகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்பட்ட முகாம்கள் மூலம், மொழி தடைகளைக் கடந்து அவர்களுக்கும் பாதுகாப்பு உரிமைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

குற்றத் தடுப்புடன் நின்றுவிடாமல், சமூகப் பொறுப்புணர்வோடு பள்ளி இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் கல்வியில் இணைக்கும் முயற்சியிலும் சிங்கப்பெண் படை சாதனை படைத்துள்ளது. கடந்த வாரப் பிரச்சாரத்தின் போது, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய 51 சிறுவர், சிறுமிகளை அடையாளம் கண்டு அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.

சிங்கப்பெண் படை மூலம் மேற்கொள்ளப்படும் தீவிர கண்காணிப்புகள் மற்றும் அவசரகால உதவி அமைப்புகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழல் தொடர்ந்து உறுதி செய்யப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+