Bharathidasan: மாணவர் பாரதிதாசன் வீடியோ உண்மைக்கு புறம்பானது! சமூக நீதித் துறை பரபரப்பு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலேசியாவில் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர் பாரதிதாசன் வெளியிட்ட வீடியோ உண்மைக்கு புறம்பானது என தமிழக சமூகநீதித் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரதிதாசனின் செலவின கோரிக்கை ரூ.19.50 லட்சம் தொடர்பாக, பரிந்துரைத்து அனுப்பும்படி தெரிவித்து அவர் படிக்கும் பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் கடிதம் 17-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் நகல் அந்த மாணவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

tamil nadu bharathidasan

பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் கிடைத்ததும் கல்வி உதவித் தொகை விடுவிக்கப்படும். இந்தத் தகவலும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாணவர் பாரதிதாசன் சமூகவலைதளத்தில் காணொளி ஒன்றை பதிவுசெய்து, உண்மைக்கு மாறான தகவல்களை பதிவு செய்துள்ளார். மாணவருக்கு இதுவரையில் முதலாமாண்டு படிப்பிற்கு ரூ.36 லட்சம் மற்றும் 2-ம் ஆண்டிற்கு ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாணவரின் காணொளியில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவும், அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் உள்ளது.

கல்வி உதவித்தொகை திட்டங்களை பொறுத்தவரை, சமூக நீதி துறை இதுவரை இல்லாத அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே மாணவரின் இந்த காணொளியானது உண்மைக்கு மாறான தகவல்களுடன் பல்வேறு மாணவர்கள் பயன்பெற்று வரும் இத்திட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அதில் ஏப்ரல் மாதம் முதல் உதவித்தொகை கேட்டு வருகிறேன். ஆனால் இப்போது வரை கிடைக்கவில்லை. என்னை பல்கலைக்கழகத்தில் இருந்தே வெளியேற்றும் நிலை உள்ளது என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிந்தார்.

மாணவர் பாரதிதாசனின் நிலையை அறிந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில், ""எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்" என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.

அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.

ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.

மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!" என தெரிவித்துள்ளார்.

அது போல் துணை முதல்வராக இருந்த உதயநிதி, "அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

#சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் #SofaModel அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.

மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது.

ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது.

அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த Reels அரசு துணை நிற்க வேண்டும்." என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சமூகநீதித் துறை விளக்கம் அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+