ஆளுநருக்கு வேற வழியே இல்ல.. முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது

Subscribe to Oneindia Tamil

ஆளுநர் திருப்பிய அனுப்பிய சட்ட முன்வடிவுகளை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேறியது.

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை திருப்பி அனுப்பிய நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூடி இருக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்வரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அதில், "15 வது சட்டமன்றப் பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2 சட்ட முன்வடிவு, 16 வது சட்டமன்றப் பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 8 சட்ட முன்வடிவுகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நெடுநாட்கள் நிலுவையில் வைத்திருந்து கடந்த நவம்பர் 13 ஆம் தேதி எவ்வித காரணமும் குறிப்பிடாமல், ஏற்பிசைவு அளிப்பதை நிறுத்தி வைப்பதாக சட்ட முன்வடிவில் குறிப்பிட்டு ஆளுநர் சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பி உள்ளார்.

Tamil Nadu Special Assembly Session: What is the resolution proposed by CM Stalin?

காரணம் எதுவும் குறிப்பிடாமல் ஆளுநர் ஏற்பிசைவு அளிப்பதை நிறுத்தி வைப்பதாக தெரிவித்து சட்ட முன்வடிவுகளை திருப்பி அனுப்பியது ஏற்புடையது அல்ல என்று இப்பேரவை கருதுகிறது. இந்திய அரசமைப்பு சட்ட உறுப்பு 220-ன் வரைமுறையின் கீழ் மேற்காணும் சட்ட முன்வடிவுகள் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆளுநரின் ஏற்பிசைவுக்காக முன்னிடப்படுமாயின், ஆளுநர் அதற்கு ஏற்பிசைவு அளித்திட வேண்டும் என்பதை அவை கவனத்திற்கு கொண்டு வருகிறது.

Tamil Nadu Special Assembly Session: What is the resolution proposed by CM Stalin?

ஏற்கனவே 15 வது சட்டமன்றப் பேரவையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு 9.1.2020ல் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, 9.1.2020 அன்று அறிமுகம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, 16 வது சட்டமன்ற பேரவையில் 25.4.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டம் திருத்த சட்ட முன்வடிவு, 5.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 10.5.2022 அன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, 9.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 10.5.2022 அன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட சென்னை திருத்த சட்ட முடிவு, 10.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, 18.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 19.10.2022 அன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் 2 ஆம் திருத்த சட்ட முன்வடிவு, 19.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழக 2 ஆம் திருத்த சட்ட முன்வடிவு, 19.04.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 21.04.2023 ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, 20.4.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 21.04.2023 ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு ஆகிய சட்ட முன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 143 இன் கீழ் மறு ஆய்வு செய்திட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது என்னும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்." என்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு திமுக, கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள், பாமக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். வாக்கெடுப்பு கொண்டு வருவதற்கு முன்பாகவே பாஜகவும் அதை தொடர்ந்து அதிமுகவும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. இறுதியாக குரல் வாக்கெடுப்பு மூலமாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+