"டான்சீட்".. ஸ்டாலினின் முக்கிய அறிவிப்பு.. பெண்களுக்கு செம குட் நியூஸ்.. ஆஹா இதை எதிர்பார்க்கலையே!
சென்னை: தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்ப்பதற்காக மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்து உள்ளது.
இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 9.47 சதவிகிதத்தை தமிழ்நாடு பங்களிக்கிறது. 2021-22 நிதியாண்டில் தமிழ்நாடுதான் இந்தியாவில் நம்பர் 2 மாநிலம். தமிழ்நாட்டில் மாநில ஜிடிபி ₹19.02 லட்சம் கோடியில் இருந்து ₹21.79 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.
2031ல் 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடையும் இலக்குடன் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களையும் வகுத்து வருகிறது. முக்கியமாக தொழிற்துறையில் மட்டும் 23 லட்சம் கோடியை முதலீடாக பெறும் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. இது மொத்தம் 46 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

டான்சீட்
தமிழ்நாட்டில் முதலீடுகளை கண்காணிக்க, முதலீடுகளை ஊக்குவிக்க The Guidance Bureau என்ற பிரிவு அரசு மூலம் இயக்கப்பட்டு வருகிறது. முதலீடுகளை கண்காணிக்க, ஊக்குவிக்க, அனுமதி அளிக்க, ஈர்க்க உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் ஒற்றை பிரிவாக இந்த The Guidance Bureau செயல்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்க்கவும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்காகவே டான்ஸீட் என்ற அமைப்பையும் தமிழ்நாடு உருவாக்கி உள்ளது. அதாவது Tamil Nadu Startup Seed Grant Fund (TANSEED) என்று அமைப்பை உருவாக்கி உள்ளது.

ஸ்டாலின் அறிவிப்பு
இந்த அமைப்பு சார்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த அமைப்பு பொதுவாக தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் தொடங்க விரும்பும் நபர்களுக்கு நிதி உதவி தருவது, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது, தொழில்களை தொடங்க இடம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இந்த உதவி மூலம் தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் சரியாக செயல்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொள்ளும். இந்த நிலையில் இவர்கள் வழங்கும் நிதி உதவி 10 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சமாக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கிரீன் டெக்
இயற்கை தொடர்பாக கிரீன் டெக் நிறுவங்கள், பெண்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு இதில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 15 லட்சம் ரூபாய் 3 கட்டங்களாக பிரித்து கொடுக்கப்படும். பெண்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் இலவச ஆபிஸ் அலுவலகங்கள் வழங்கப்படும். இதற்கு வாடகை கொடுக்க வேண்டியது இல்லை. மற்ற நிறுவனங்களுக்கு co-working spaces பகுதிகள் வழங்கப்படும்.

Startup TN
StartupTN என்ற டெஸ்க் இதற்காக உருவாக்கப்பட்டு எளிதாக எல்லோருக்கும் அனுமதி வழங்கப்படும். இவர்கள் உருவாக்கும் பொருட்களை மாநில அரசே கொள்முதல் செய்யும் திட்டமும் உள்ளது. மாநில அரசு கொள்முதல் செய்யும் வகையிலான பொருட்களை இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலமாக உருவாக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இதற்காக முதல் கட்டமாக 1.25 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. 25 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதல் தவணையாக 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு வழிகாட்டுவதற்காக MentorTN என்ற தனி தளமும் உருவாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தளம் மூலம் தொழில் தொடங்கிய பின் ஏற்படும் சந்தேங்கங்களை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தீர்த்துக்கொள்ள முடியும், என்பது குறிப்பிடத்தக்கது.
-
சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம்.. இப்போது அடகு வைப்பது புத்திசாலித்தனமா? ‘பவுன்’ கணக்கு இதோ -
மாதம் ₹10,000 வாடகை கொடுக்கிறீங்களா? இதே பணத்தில் வீடு வாங்கிய ரகசியம்.. 2026ல் லாபம் தரும் கணக்கு -
தங்க பத்திர திட்டம்: 8 வருஷம் காத்திருந்தால் முழு வரி விலக்கு.. தங்கம் வாங்குபவர்களுக்கு டபுள் லாபம் -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
உளவுத்துறையில் கூட கை வைக்கல.. டெல்லி மீது எடப்பாடி ஏக டென்சன்.. திமுகவிற்கு கிடைத்த ஃப்ரீ ஹேண்ட் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்?












Click it and Unblock the Notifications