6–7ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஒரேயொரு பாடப்புத்தக முறை.. பள்ளி கல்வித்துறை கொண்டு வரும் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் கல்வியாண்டான 2027-2028 ம் ஆண்டில் இருந்து தமிழக அரசு பாடத்திட்டத்தில் பயிலும் 6 மற்றும் 7 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பருவ வாரியாக புத்தகங்கள் வழங்கப்படும் தற்போதைய நிலை மாற்றப்பட்டு மொத்தமாக ஒரேயொரு புத்தகம் வழங்கும் முறையை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தமிழக அரசின் பாடத்திட்டத்தில் 8 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு முழுவதும் ஒரே பாடப்புத்தகத்தை படித்து தேர்வெழுதும் நடைமுறை அமலில் உள்ளது.

school tamil nadu education

ஆனால் 1ம் முதல் 7 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு முப்பருவ பாடத்திட்ட முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் புத்தகங்கள் தனித்தனியே வழங்கப்பட்டு அதனடிப்படையில் காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் வரும் 2027-2028 கல்வியாண்டில் 6 மற்றும் 7 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு முப்பருவ பாடத்திட்ட முறையை கைவிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி 6, 7 ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது இருப்பது போல் பருவ வாரியாக 3 முறை புத்தகங்கள் வழங்கப்பட்டு தேர்வுகள் நடக்காது. மாறாக ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு புத்தகம் வழங்கப்பட்டு அதனடிப்படையில் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபற்றி பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில் ,''அடுத்த கல்வியாண்டு முதல் 6,7 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஒரே பாடப்புத்தகத்தை உருவாக்கும் முடிவு இன்னும் பரிசீலனையில் உள்ளது. இதுபற்றி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட யாரிடமும் இன்னும் கலந்தாலோசிக்கவில்லை. அடுத்த கல்வியாண்டு முதல் 6 மற்றும் 7-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு முழுவதும் ஒரே பாடப்புத்தகங்கள் இருக்கும் என்று தகவல்கள் பரவி வருகின்றன" என கூறினர்.

மேலும் தமிழகத்தில் முப்பருவ பாடத்திட்டத்தை கைவிடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 8 ம்வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு முப்பருவ முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு அந்த முப்பருவ பாடத்திட்டம் கைவிடப்பட்டு ஒரே புத்தகம் வழங்கப்பட்டது. தற்போதும் இதுதான் நடைமுறையாக உள்ளது.

தமிழகத்தில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளின் புத்தக சுமையை குறைக்கும் வகையில் இந்த முப்பருவ கல்வி முறை தொடங்கப்பட்டது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது கடந்த 2013ம் ஆண்டு முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. 1-8 ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அது படிப்படியாக மாற்றம் செய்யப்பட்டு வருவது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+