திரைப்பட விருது அமைப்புகள் நேர்மையாக செயல்படுகிறதா? பா.ரஞ்சித் கேள்வி! சுரேஷ் காமாட்சியும் கண்டனம்
சென்னை: தமிழக அரசு திரைப்பட விருதுகளை நேற்று அறிவித்துள்ள நிலையில் விருது அமைப்புகள் நேர்மையாக செயல்படுகிறதா என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்த ஆர்யா, பசுபதிக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் அவரது கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அது போல் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 2014 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சி! அதில் மாநாடு படத்திற்கு இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த எடிட்டருக்கான விருது
@Cinemainmygenes , சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது
@Richardmnathan வழங்கப்பட்டுள்ளது. இருவருக்கும் என் வாழ்த்துகள்.
மிக மிக அவசரம்
அதேசமயம் 2019 இல் வெளியான "மிக மிக அவசரம்" படம் தேர்வாளர்களின் பார்வையில் படாமல் போனது ஏனோ?! சமூகம் சார்ந்து பெண் போலீசாரின் அவஸ்தையை கருணையோடு அணுகிய படம் கண்ணை மறைத்துவிட்டது போலும். ஒருவேளை தமிழக அரசு விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வந்திருந்தால் பார்வைக்கு கிடைத்து விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம். இப்படி பல வருடங்களாகக் கிடப்பில் போட்டு மொத்தமாக வழங்குவதால் கூட கண்ணில் படாமல் போயிருக்கலாம்.

வாழ்த்துகள்
நல்ல படங்கள் இப்படித்தான் கவனிக்கப்படாமல் போய்விடுகின்றன. சமூகம் சார்ந்த ஒரு நல் முயற்சியை விருதுப்பட்டியலில் விடுபட வைத்த தேர்வுக்குழுவினருக்கும்.. தமிழக அரசுக்கும் என் வாழ்த்துகள்! இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுகள் அறிவிப்பு
தமிழக அரசு சிறந்த நடிகர், நடிகைகள், சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர்கள் என பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை வெளியான தமிழ் படங்களுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.

யாருக்கு விருது
திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த படம்
சிறந்த படங்களாக மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இசையமையப்பாளருக்கான விருது
சிறந்த இசையமைப்பாளர்களுக்கான விருதில் சாம் CS- புரியாத புதிர்
ஹிப் ஹாப் தமிழா- கவண்
சந்தோஷ் நாராயணன் - வடசென்னை
தமன்- மகாமுனி
ஜி.வி. பிரகாஷ் - சூரரைப் போற்று
ஷாம் ரோல்டன் - ஜெய் பீம்
ஏ.ஆர்.ரஹ்மான் - பொன்னின் செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளன.
உதயநிதி ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி, தமிழ்நாடு அரசின் சார்பில் 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் 2015-16 முதல் 2021-2022 வரையான கல்விஆண்டுகளுக்குரிய எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவற்றை வழங்குகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications