Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலக்குதே தமிழ்நாடு அரசு.. முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அதிரடியை பாருங்க.. விண்ணப்பிக்க அழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு அடுத்தக்கட்ட அதிரடியை கையில் எடுத்து உள்ளது.. சுற்றுலாத்துறையின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வெளிநாடு, வெளிமாநில மக்களை ஈர்க்கும் அளவுக்கு தமிழ்நாடு, வளம் வாய்ந்தது.. மனதை மயக்கும் நிலப்பரப்புகள், கலாச்சார பாரம்பரியம், கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், பாரம்பரியம் பேசும், கலை வடிவங்கள், ஆச்சரியப்படுத்தும் கைவினைப் பொருட்கள் என எத்தனையோ அம்சங்கள் தமிழகத்தில் உள்ளதால்தான், உலகமெங்கும் பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள்.

அதனால்தான், தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியிலும், சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுடன் சுற்றுலாவின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

Tamil Nadu state Tourism awards 2023 announced for 2023 by Tourism Department

விருதுகள்: அதேபோல, தமிழக முதல்வரும், சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை தொடர்ந்து நிலைநிறுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார். அந்தவகையில், சுற்றுலாவில் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை கடந்த 2022 ம் ஆண்டு முதல் சுற்றுலா விருதுகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வழங்கி வருகிறது.

சுற்றுலாவில் வெற்றியாளர்கள் பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவர்களுக்கு தமிழக சுற்றுலாத் துறை முதல் முறையாக சுற்றுலா விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, தமிழகத்துக்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்புக்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த எம்ஐசிஇ சுற்றுலா அமைப்பாளர், சமூக ஊடகங்களில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழகத்துக்கான சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரப்படுத்துதல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்.

முதல்முறை: இந்த விருதுகள் உலக சுற்றுலா தினமான அதாவது, செப்டம்பர் 27ம் தேதியை முன்னிட்டு வழங்கப்படுகிறது. கடந்த வருடம்தான் முதல்முறையாக சுற்றுலா துறையின் கீழ் பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த வருடமும் 2வது முறையாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விருது வழங்கும் விழா (Tamil Nadu State Tourism Awards 2023) இப்போது நடக்க உள்ளதால், அதற்கு இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இணையதளம்: விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சுற்றுலாத் துறையால் உலக சுற்றுலா தினத்தன்று விருதுகள் வழங்கப்படும். விருதுகளுக்கான விண்ணப்பங்கள் 'www.tntourismawards.com' என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் இணையவழியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தொடர்பான தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், மாநிலத்தின் பல சுற்றுலா பங்குதாரர்களிடையே சுற்றுலாவை மேம்படுத்த வழிவகுக்கிறது. மேலும், ஒரு நல்ல ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கவும் இது ஆதரமாக அமையும் என்றும் நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+