மொத்தம் ரூ.21,980 கோடி.. தமிழக போக்குவரத்து கழகத்தின் கடன் 3 மடங்கு உயர்வு - சிஏஜி அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் ரூ.21,980 கோடியாக அதிகரித்துள்ளது. 2017 ம் ஆண்டை ஒப்பிடும்போது தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கடன் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகம் தொடர்ந்து கடனில் இயங்கி வருகிறது. இதனால் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வப்போது போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

cag report

இந்நிலையில் தான் 2023ம் ஆண்டு மார்ச் 31 நிறைவடைந்த நிதி ஆண்டிற்கான , தமிழ்நாடு அரசு மீதான மாநில நிதி தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் கடந்த 7 ஆண்டுகளில் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் ரூ.21,980 கோடியாக அதிகரித்துள்ளது. 2017 ம் ஆண்டு ரூ.6,467 கோடியாக இருந்த கடன் 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஊழியர்களின் செலவினமானது, 55.20 சதவிகிதம் முதல் 63.5 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாகவும், போக்குவரத்து கழக ஊழியர்களை வேறு பணிக்கு அனுப்பியதால் , ரூ.495 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்நாடகா , கேரளா போக்குவரத்து கழகங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. மின்னணு ஏல செயல்முறைக்கான இலவச இணைய முகப்பை பயன்படுத்தாததால் ரூ. 17.82 கோடி கூடுதல் செலவானதாக சிஏஜி கூறியுள்ளது. அதேபோல் மருத்துவும பணியாளர்களை பணியமர்த்துவதில் தமிழகம் பின்தங்கி உள்ளது. தனி வாரியம் இருந்தும் கூட பணியாளர்களை புதிதாக சேர்ப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இயக்குநரகங்களில் 28 சதவீத பணிகள் காலியிடங்களாக உள்ளன.

அதேவேளையில் மாநிலத்தில் வருவாய் பற்றாக்குறை என்பது குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2021 -2022ம் ஆண்டில் மாநிலத்தில் வருவாய் பற்றாக்குறை என்பது ரூ.46,538 கோடியாக இருந்தது. ஆனால் இது கடந்த 2022-2023ல் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.36,215 கோடியாக குறைந்துள்ளளது. முந்தைய ஆண்டை விட 2022-2023ல் வருவாய் வரவுகள் அதிகரிப்பதே பற்றாக்குறை குறைவிற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+