இதுதான் ரொம்ப முக்கியம்.. கோவை, சேலம், மதுரைக்கு ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்.. வருகிறது மாஸ் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக 1400 நகர மற்றும் மாநகர பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் அரசு மாநகர பேருந்துகள், நகர பேருந்துகள் மற்றும் விரைவு போக்குவரத்துக்கழகம் சிறப்பாக செயல்பட்டாலும் பேருந்துகள் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் அதிநவீன பேருந்துகள் போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.

Tamil Nadu State Transport Corporation plans to procure 1400 new buses for tier 2 cities

ஆனால் தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக நவீன பேருந்துகள் வாங்கப்படுவது குறைவாகவே உள்ளது. கர்நாடகாவில் இருக்கும் அரசு விரைவு பேருந்துகள் வேற லெவல் தரத்தில் உள்ளன.

உதாரணமாக கர்நாடகாவின் ஐராவத் போன்ற பேருந்துகள் தனியாரை விட அதிக வசதி கொண்டதாக மக்கள் விரும்பும் விரைவு பேருந்துகளாக உள்ளன. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக விரைவு பேருந்துகளில் அதிரடி மாற்றங்களை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் பேருந்துகளில் இருக்கும் குறைகளை சரி செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, 600 நகர பேருந்துகள், 800 மாநகர பேருந்துகளை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளனர். விரைவில் இந்த பேருந்துகள் தமிழ்நாட்டு சேவையில் களமிறக்கப்படும்.

இவற்றில் பெரும்பாலான பேருந்துகள் சேலம், மதுரை, கோவை, திருச்சியில்தான் களமிறக்கப்பட உள்ளன. இங்கே செல்லும் பேருந்துகள் நல்ல தரமுடன் இல்லை என்பதால் உடனடியாக அங்கே புதிய பேருந்துகளை களமிறக்க முடிவு செய்துள்ளனர். மொத்தமாக கோவைக்கு மட்டும் 160 பேருந்துகள் புதிதாக வழங்கப்பட உள்ளன.

அதேபோல் பழைய பேருந்துகளும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக புனரமைக்கப்பட்ட பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு உள்ளது. தற்போது சில்வர் - நீல நிறத்தில் இருக்கும் பேருந்துகள் வெள்ளை - மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன. இந்த புதிய பேருந்துகளுடன் படங்களின் @tnstcbus வெளியிட்டு உள்ளது. வெள்ளை - மஞ்சள் கலந்த உருவத்தில் இந்த பேருந்துகள் உள்ளன.

குறைபாடுகளை களைய முடிவு: இது பேருந்துகளில் உள்ள வசதி குறைபாடுகளை களைய ஆலோசனைகளை செய்து வருகின்றனர். நேரடியாக பேருந்து ஆர்வலர்கள், மக்களிடம் இருந்து தற்போது உள்ள மாண்புமிகு மேலாண் இயக்குனர் @tnstcbus குழு உள்ளிட்ட சமூக வலைதள வாயிலாக கருத்துகளை பெற முடிவு செய்துள்ளார்.

மேலும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் 200 புதிய படுக்கை மற்றும் இருக்கை வசதி பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளது இதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. அதேபோல் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சமீபத்தில் 450 டவுன் பஸ்களை வாங்குவதற்கு டெண்டர் எடுத்துள்ளது.பிரிவு வாரியாக ஒதுக்கப்பட்ட பேருந்துகளின் பட்டியல்

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் விழுப்புரம்- 82
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம்- 112
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சேலம்-44
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கோயம்புத்தூர்-52
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மதுரை-99
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி-61
மொத்தம்-450 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+