Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் பரிசு + ரூ.1000.. ரேஷன் கடைகளில் செய்யப்பட்ட ஸ்பெஷல் ஏற்பாடு.. போன மக்களுக்கு சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து ரேஷன் கடைகளில் தற்போது சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எல்லா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tamil Nadu surprise to people amid giving Pongal Gift an 1000 rs in Ration Shops

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும் இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும்.

ஏன். மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-1-2024 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

பொங்கல் பரிசு: மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, இன்றே வழங்கப்பட்டு உள்ளது. இன்று காலை வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் வரவு வைக்கப்பட்டது.

தொடங்கிய நிகழ்வு; பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் இருந்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்த முறையும் மஞ்சள் பையில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. எப்போதும் இல்லாத வகையில் முதல்முறையாக மஞ்சள் பையில் முதல்வர் ஸ்டாலின் படம் இடம்பெற்றுள்ளது. அவரின் உருவப்படம் உள்ள மஞ்சள் பையில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அரசு சேவைகள், திட்டங்கள் எதிலும் பெரும்பாலும் முதல்வர் படம் இல்லாத நிலையில் முதல்முறையாக அவரின் படம் இடம்பெற்றுள்ளது.

பொங்கல் வழக்கம்: தமிழ்நாட்டில் எல்லா வருடமும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும். கடந்த 2022ம் வருடம் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. 2023 வருடம் இதையடுத்து பரிசு பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் கடந்த வருடம் வழங்கப்பட்டது.

அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. கரும்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரும்பு விநியோகம் செய்யப்படவில்லை என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக அரசியலாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மாற்றம்: முக்கியமாக அதிமுக சார்பாக இதற்கு எதிராக போராட்டமும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசு துரிதமாக செயல்பட்டு கரும்புகளை கொள்முதல் செய்து மக்களுக்கு கொடுப்போம் என்று அறிவித்தது. கரும்புடன் சேர்த்து 1000 ரூபாய் பணம் வழங்கப்படுவது மக்கள் இடையே வரவேற்பை பெற்றது.

இந்த வருட பரிசு: இதையடுத்து இந்த வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு. அதன்படி, தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும்.

இதற்காக ரூபாய் 238.92 கோடி செலவிடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டிற்கான, பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கிட 31.12.2023 அன்றைய தேதி நிலவரப்படி, 2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அப்படி செய்யும் பட்சத்தில் தோராயமாக ரூ.238,9272747- (ரூபாய் இருநூற்று முப்பத்து எட்டு கோடியே தொண்ணூற்று இரண்டு இலட்சத்து எழுபத்து இரண்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து ஒன்று மட்டும்) செலவினம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

என்ன நடக்கிறது ரேஷனில்: ரேஷன் கடைகளில் மக்கள் வரிசையாக நிற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டோக்கனில் ஏற்கனவே நேரம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதனால் அவசியமற்ற கூட்டம் ஏற்படவில்லை. கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் வேகமாக பணம் வாங்கிக்கொண்டு செல்ல முடிகிறது. ஏற்கனவே டோக்கன் உள்ளதால்.. உடனுக்குடன் பணம் வழங்கப்படுகிறது.

இதில் சர்ப்ரைஸ் விஷயம் என்னவென்றால்.. பெரும்பாலான ரேஷன் கடைகளில் அப்பகுதி கவுன்சிலர்கள் நேரத்திற்கு நேரம் பார்வையிடுகிறார். இதில் ஏற்படும் ஒரே குழப்பம் என்னவென்றால்.. நிவாரணத்திற்கு டோக்கன் கிடைக்காதவர்கள் முறையீடு செய்துள்ளனர். இதற்காக விண்ணப்பம் பூர்த்தி செய்து அவர்கள் மனு கொடுத்துள்ளனர். இதற்குத்தான் கொஞ்சம் கூட்டம் உள்ளது. மற்றபடி வேறு கூட்டம் இல்லை.

சில ரேஷன் கடைகளில் லைனில் நிற்பவர்கள் மீது வாகனங்கள் மோதாமல் இருக்க வசதியாக பேரிகேட்கள் போடப்பட்டு உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+