அடித்து ஆடுகிறாரே தங்கம் தென்னரசு.. இபி போர்ட் எடுத்த முக்கிய நடவடிக்கை.. களமிறக்கப்பட்ட "ராட்சசன்"!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டாங்ஜெட்கோ) வடசென்னையில் நிலக்கரியை திறமையாக கையாளும் வகையில் வேகன் ஏற்றும் வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. ரூ. 50 கோடி திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கைகளைப் பெறுவதில் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவி ஏற்றதில் இருந்தே பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் புதிய முடிவு ஒன்றை லண்டன் ஆய்வாளர்கள் பரிந்துரையின் பெயரில் அவர் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Tamil Nadu Tangedco EB board build wagon loader facility in North Chennai too

அதன்படி மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 ஆக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது 3 நிறுவனங்களாக இதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் கடன் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த பரிந்துரை அறிக்கை இந்த கடன் நிலைமையை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

என்ன பரிந்துரை: மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளை கவனிக்கும் வகையில் தனி தனி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று இந்த பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு அரசுதான் இனி முடிவு எடுக்க வேண்டும். ஏற்கனவே சில மாநிலங்களில் மின்சார வாரியம் இப்படி 2-3 வகையாக பிரிந்து உள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் இதே ஐடியா கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) 2017 இல், மின்சார வாரியத்தை தனி விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்களாக பிரிக்க பரிந்துரைத்தது. ஆனால் அப்போது இந்த மாற்றம் செய்யப்படவில்லை.

மாற்றங்கள் வரும்: டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் சில மாநிலங்கள் அவற்றின் மின் விநியோகம் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களின் பிரிவுக்குப் பிறகு சாதகமான முடிவுகளை பெற்றுள்ளன. அதாவது இந்த துறையை இரண்டாக பிரித்த பின் அவை சாதகமான முடிவுகளை பெற்றுள்ளன.

டான்ஜெட்கோவை மூன்று நிறுவனங்களாக மாற்றினால், அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி செழித்து திறம்பட செயல்பட முடியும். இதனால் உற்பத்தி அதிகரிக்கும். கடன் அடியோடு குறையும் என்றும் மின்சார துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

புதிய வசதி: இந்த நிலையில்தான் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) வடசென்னையில் நிலக்கரியை திறமையாக கையாளும் வகையில் வேகன் ஏற்றும் வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

தற்போது, ​​ஒடிசாவில் உள்ள தால்சர் மற்றும் ஐபி பள்ளத்தாக்கு சுரங்கங்கள் மற்றும் தெலுங்கானாவில் உள்ள சிங்கரேணி சுரங்கங்கள் போன்ற இடங்களில் இருந்து டான்ஜெட்கோ நிலக்கரியை பெறுகிறது. ஒடிசாவில் இருந்து எண்ணூர், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களுக்கு அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு சிங்கரேணி சுரங்கங்களில் வேகன்கள் மூலம் நிலக்கரி விநியோகம் செய்யப்படுகிறது.

அதாவது வேகன் என்றால் நிலக்கரி கொண்டு செல்லும் ரயில். புதிதாக கட்டப்பட்டுள்ள வடசென்னை மூன்றாம் நிலை அனல் மின் நிலையத்தை டிசம்பருக்குள் இயக்க டான்ஜெட்கோ தயாராகி வருகிறது. இதற்காக வடசென்னையில் நிலக்கரியை திறமையாக கையாளும் வகையில் வேகன் ஏற்றும் வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

2022-23ல் சிங்கரேணி சுரங்கங்களில் இருந்து மட்டும் 14.03 லட்சம் டன் நிலக்கரியை டான்ஜெட்கோ கொள்முதல் செய்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி 19,347 மெகாவாட்டைத் தொட்ட மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அடுத்த ஆறு ஆண்டுகளில் இது 25,000 மெகாவாட்டாக இருக்கும் என்று டான்ஜெட்கோ கணித்துள்ளது.

சென்னையில் நிலக்கரியை திறமையாக கையாளும் வகையில் வேகன் இதுவரை இல்லாத நிலையில்தான் தற்போது வேகன் களமிறக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+