ரூ.20,000 பண்டிகை முன்பணம்.. அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் கிடைக்கும்! தமிழக அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பண்டிகை கால செலவுகளுக்காக டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20,000 முன்பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் விரும்பும் பண்டிகைக்கு ஏற்ப முன்பணம் பெற்று கொள்ளலாம் என்றும் 10 தவணைகளாக மாத சம்பளத்தில் முன்பணம் பிடித்தம் செய்யப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிர்வாகம் சார்ந்து சமீப காலங்களில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் தான் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. இதற்கிடையே இப்போது தமிழ்நாடு அரசு சார்பில் மற்றொரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TASMAC Employees

டாஸ்மாக்

அதில் பண்டிகை கால செலவுகளுக்காக டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20,000 முன்பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த முன்பணம் வட்டி இல்லாமல் வழங்கப்படுவதுடன், பின்னர் 10 மாதங்களில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து சம தவணைகளாக பிடித்தம் செய்யப்படும்.

பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும் என்பது டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் நிர்வாகம் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தற்போது அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், இது தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளது.

முன்பணம்

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் தகுதியுடைய அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை ரூ.20,000 பண்டிகைக் கால முன்பணம் வழங்கப்படும். இந்த தொகைக்கு எந்தவித வட்டியும் வசூலிக்கப்படாது. மேலும், ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமான பண்டிகையை தேர்வு செய்து முன்பணத்தை பெற்று கொள்ளலாம். பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.

ஒரு ஆண்டில் ஒரு முறை மட்டுமே இந்த முன்பணத்தை பெற முடியும். ஏற்கனவே பெற்ற முன்பணத்தின் முழு தொகையும் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு முடிந்த பிறகே அடுத்த முன்பணம் வழங்கப்படும். தங்களுக்கு விருப்பமான பண்டிகையைத் தேர்வு செய்யும் ஊழியர்கள், அந்த பண்டிகை நடைபெறும் மாதத்துக்கு முந்தைய மாதத்திலேயே மாவட்ட மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

வங்கிக் கணக்கில்

தேர்வு செய்த பண்டிகைக்கு முந்தைய மாத ஊதியத்துடன் ரூ.20,000 முன்பணம் வழங்கப்படும். எந்த பண்டிகைக்கும் விண்ணப்பிக்காத ஊழியர்களுக்கு, டிசம்பர் மாத ஊதியத்துடன் பொங்கல் பண்டிகைக்கான முன்பணம் வழங்கப்படும். இந்த தொகை ஊழியர்களின் சம்பளம் வரவு வைக்கப்படும் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்படும்.

எப்படி பிடித்தம் செய்யப்படும்

முன்பணம் பெற்ற அடுத்த மாதத்தில் இருந்து, மாதந்தோறும் ரூ.2,000 வீதம் 10 சம தவணைகளாக சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். உதாரணமாக, டிசம்பர் மாத சம்பளத்துடன் பொங்கல் முன்பணம் பெற்றால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை ரூ.2,000 வீதம் பிடித்தம் செய்யப்பட்டு ரூ.20,000 முழுமையாக வசூலிக்கப்படும்.

ஒருவேளை ஊழியர் முழு தொகையையும் செலுத்துவதற்கு முன்பாக பணியில் இருந்து விலகினாலோ அல்லது ஓய்வு பெற்றாலோ, அவருக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் இருந்து மீதமுள்ள முழு தொகையும் ஒரே தவணையாக பிடித்தம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+