ஜில் ஜில் ஒயின்ஸ் ரிட்டர்ன்ஸ்..தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! பேசியது உண்மை தான் என்கிறார் அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசுக்கு மிகப்பெரும் வருவாயை ஈட்டி தந்த டாஸ்மாக் மது விற்பனையை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அரசு டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதே தவிர உறுதியான முடிவு எடுக்கவில்லை என தமிழக மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு வரை டாஸ்மாக் தனியார் வசம் இருந்த நிலையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் மதுபான சில்லறை விற்பனையை நேரடியாக அரசை ஏற்று நடத்தும் என அறிவித்தார்.

அப்போது தனியார் மதுபான விற்பனை நிறுத்தப்பட்டு டாஸ்மாக் மூலம் நேரடி அரசு மதுபான கடைகள் மூலம் விற்பனையில் இறங்கியது. அதற்குப் பிறகு கடந்த 23 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனம்தான் மதுபான சில்லறை விற்பனையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Vijay TASMAC Tamil Nadu

டாஸ்மாக்

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் மது விற்பனையை கைவிட்டு மீண்டும் தனியார் கைகளுக்கு கொடுக்கும் முடிவை தமிழக அரசு எடுத்திருப்பதாக தகவல் வெளியானது. இதற்காக தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்த சட்ட திருத்தம் விரைவில் நடக்க உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் உலாவின.

டாஸ்மாக் தனியார்மயம்

முதற்கட்டமாக நகர்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, படிப்படியாக முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால் பார்களுடன் சேர்த்து சுமார் 2,500 டாஸ்மாக் மது கடைகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்படும் எனவும் சொல்லப்பட்டது.

அமைச்சர் விக்னேஷ்

இந்நிலையில், இந்நிலையில், அரசு டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதே தவிர உறுதியான முடிவு எடுக்கவில்லை என தமிழக மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். கோவை பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," லஞ்ச ஒழிப்புத்துறை ஆதாரம் இல்லாமல் யார் மீதும் வழக்குப்பதிவு செய்ய மாட்டார்கள். இதற்கெல்லாம் கருத்து சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு பயன்பெறும் வகையில் உள்ள கேள்விகளுக்கும் மக்களின் வளர்ச்சி இருந்தால் அதைப் பற்றி பேசலாம்.

மதுவிலக்குத் துறை

தமிழகத்தில் கடந்த ஆடியால் மதுவிலக்குத் துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை சரி செய்ய பலக்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் டாஸ்மாக் நிர்வாகத்தை தனியார் மயமாக்குவது போன்ற விஷயங்கள் எல்லாம் விவாதிக்கப்பட்டது தான். எதுவும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. எங்கெல்லாம் முறைகேடாக கனிம வளங்கள் கடத்தப்படுகிறது, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

விரைவில் அறிவிப்பு?

மூன்று மாதங்களுக்கு அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்லக்கூடாது எனதடை விதிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தினுடைய செல்வங்களை பாதுகாக்க வேண்டும். முறைகேடாக யாரும் பயன்படுத்தக் கூடாது. இப்பிரச்சினைகள் படிப்படியாக தீர்வு காணப்படும்" என தெரிவித்தார். இதன்மூலம் விஜய் அரசு டாஸ்மாக் தனியார் மயம் குறித்து விவாதித்தது உண்மை தான் என்பது உறுதியாகியுள்ள நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+