தமிழ்நாட்டில் இன்றும் வெப்பம் புதிய உச்சத்தை தொடும்.. கவனமாக இருங்க.. வாட்டி எடுக்கும் வானிலை
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் வெப்பம் அதிகரிக்கும். வெப்பநிலை புதிய உச்சத்தை தொடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் இன்னும் தொடங்கவில்லை. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து வெயில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் வெப்பம் உச்சத்தை தொடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலும் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை சராசரியாக தமிழ்நாடு முழுக்க நிலவும் வாய்ப்புகள் உள்ளன.
கடந்த ஒன்றரை வாரமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த வருடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையான அவதிக்கு உள்ளாக தொடங்கி உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது. ஆனால் இதெல்லாம் வெறும் டீசர்தான். மார்ச் மாத இறுதியில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
தமிழ்நாடு உயரும்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வருடத்தில் நேற்று அதிக வெப்பமான நாட்களில் ஒன்றாகும். நேற்று 39 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை கடந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நேற்றை விட இன்று வெப்பம் அதிகமாக இருக்கும். நேற்று மீனம்பாக்கம் மாநிலத்தில் வெப்பம் அதிகமாக இருந்தது. இன்றும் அதைவிட அதிக வெப்பநிலையுடன் மீனம்பாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது. புறநகர்ப் பகுதிகளில் 40 C ஐ தொட கூட வாய்ப்பு உள்ளது. உண்மையான கத்ரி வெயில் இன்னும் தொடங்க வில்லை.
ஆனால் இன்று முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. வெப்பம் - வானிலை: தமிழ்நாட்டில் மழை, பனி காலம் நிறைவு பெற்று கோடைகாலம் தொடங்க வேண்டியதற்கான காலம் நெருங்கிவிட்டது. இதனால் வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, மதுரை, வேலூர், தஞ்சை, திருச்சி, நெல்லை, நாமக்கல்லில் முதல் கட்டமாக வெயில் உச்சத்தை தொட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications