சூப்பர்.. PHH, AAY ரேஷன் கார்டு இருக்கா? வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: தமிழகத்தில் அரசின் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டுகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களும் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், தாயுமானவர் திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்களுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய பயனாளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்துப் பார்க்கலாம்.
தமிழகத்தில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறையின் கீழ் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ரேஷன் கார்டுகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுமக்களின் அத்தியாவசிய அடையாள அட்டையாகவும் ரேஷன் கார்டு பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் இரண்டு கோடியே 20 லட்சம் ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. தற்போது அவை டிஜிட்டல் முறையில் அப்டேட் செய்யப்பட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாற்றப்பட்டு இருக்கின்றன.

ரேஷன் கார்டு
தற்போதைய சூழலில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறையின் கீழ் 7 கோடியே 46 லட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர். தற்போதைய சூழலில் அந்தியோதயா ரேஷன் கார்டு மூலம் 35 கிலோ அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இந்த அளவு மாறி மாறி அமையும். அதாவது ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ரேஷன் கடை
மேலும் மாதம் ரேஷன் கார்டு அப்டேட்டும் செய்யப்படும். உதாரணத்திற்கு குழந்தை பிறப்பு, திருமணம் போன்றவை காரணமாக பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் எண் மாற்றம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. இதில் ஏற்கனவே குறிப்பிட்டது போல திருத்தங்களை பொதுமக்கள் மேற்கொள்ளலாம். இந்த நிலையில் தமிழக அரசு ரேஷன் கார்டு காரர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
தாயுமானவர் திட்டம்
அதாவது தாயுமானவர் திட்டம் மூலம் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதை அடுத்து பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் புதிய பயனாளிகள் மற்றும் கண்டறியப்படாத பயனாளிகளைச் சேர்க்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மூத்த குடிமக்கள்
இதற்காகப் பொதுமக்கள் தனியே எந்தத் துறையையும் நாட வேண்டியதில்லை. ஒவ்வொரு மாதமும் தங்கள் பகுதிகளில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரி, சென்னை என்றால் மண்டல அலுவலகங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் நடைபெறும். அங்கு வயதுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைச் சமர்ப்பித்து தாயுமானவர் திட்டப் பயனாளிகளாகத் தங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கென்று தனியாக எந்த முகாமும் அல்லது விண்ணப்பமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் முகாம்
எனவே ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடைபெறும் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்களைப் பொதுமக்கள் தாயுமானவர் திட்டத்தின் கீழ் தங்களைப் பயனாளிகளாக இணைத்துக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. மேலும் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைப்பு உள்ளிட்ட சேவைகளையும் இந்த முகாம்கள் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications