இது லிஸ்டுலேயே இல்லையே.. தமிழ்நாடு ரேஷன் கடைகளில் முக்கிய மாற்றம்.. ஸ்டாலினின் மெகா பிளான்.. சூப்பர்
சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு ஒன்றையும் எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாடு முழுக்க இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது
அதன்படி நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 2 மாவட்டங்களில் முதற்கட்டமாக இந்த செயல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று காலை இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2 கிலோ கேழ்வரகு இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
இந்த வருடம் இந்தியாவில் சிறுதானிய வருடமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இந்த வருடத்தில் இருந்து ரேஷன் கடைகளில் கேழ்வரகு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களுக்கு 1350 டன் கேழ்வரகை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதில் தமிழ்நாடும் நேரடியாக கேழ்வரகை கொள்முதல் செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் கேழ்வரகை கொள்முதல் செய்வதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக ஓசூர், பென்னாகரம், தருமபுரி, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து கேழ்வரகை தமிழ்நாடு அரசு வாங்கி வருகிறது.
வரும் நாட்களில் கேழ்வரகு தமிழ்நாடு முழுக்க அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்யப்படும். அப்போது கேழ்வரகு தேவை அதிகரிக்கும்.
இந்த நிலையில் மற்ற மாநிலங்களில் இருந்து நேரடியாக தமிழ்நாடு அரசே கேழ்வரகை கொள்முதல் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்க முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு முழுக்க இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காக பிற மாநிலங்களில் இருந்து கேழ்வரகை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது .
சிறப்பான ரேஷன் கடைகள் : தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன.
பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.

அரிசி: இன்னொரு பக்கம் மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் பல்வேறு மாநிலங்களில் வரும் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது அரிசியை செறிவூட்டி, அதிக சத்துக்களுடன் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் தமிழ்நாட்டிலும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 கட்டமாக செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தை இன்னும் சில மாதங்களுக்குள் மொத்தம் கொண்டு வருவோம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் ரேஷன் பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை, ரேஷன் ஊழியர்கள் ஊழல் செய்கிறார்கள், முறைகேடு செய்கிறார்கள் என்று தோன்றினால் அதை பற்றி புகார் அளிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்காக 18004255901 என்ற புகார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த எண்ணை தொடர்பு கொண்டு ரேஷன் தொடர்பான புகார்களை அளிக்க முடியும்.
சமீபத்தில் கூட அரிசி பற்றாக்குறை புகார் வந்தால், 24 மணி நேரத்தில் இதில் பறக்கும்படை ஆய்வு செய்ய வேண்டும். அரிசி திருடப்பட்டுள்ளதா என்பதை மண்டல அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications