சாலை அகல விதிமுறையை மாற்றும் தமிழ்நாடு அரசு.. இனி அனுமதி வாங்குவது எளிது.. இதை நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு முழுக்க லேஅவுட்களுக்கான குறைந்தபட்ச சாலை அகல விதிமுறையை தளர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக முறைப்படுத்தப்பட்ட நகரம் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் அங்கீகரிக்கப்படாத லேஅவுட்களில் உள்ள மனைகளை விரைவாக திட்ட அனுமதி பெற வசதியாக லேஅவுட்களுக்கான குறைந்தபட்ச சாலை அகல விதிமுறையை தளர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் கொண்டு, லேஅவுட்களுக்கான குறைந்தபட்ச சாலை அகல விதிமுறை நகரங்களில் 7 மீட்டரில் இருந்து 6.5 மீட்டராகவும், கிராம பஞ்சாயத்துகளில் 6 மீட்டராகவும் குறைக்கப்படும் என வீட்டுவசதித்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகரப் பகுதி, பேரூராட்சி கிராமப் பஞ்சாயத்துகள், மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றில் குடியிருப்பு தளவமைப்புகளுக்கான அகலத் தேவை ஏழு மீட்டராகத் தொடரும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுக்க இப்போதுவரை மொத்தம் 27,690 அங்கீகரிக்கப்படாத லேஅவுட்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த லேஅவுட்களில் பல ஏழு மீட்டருக்கும் குறைவான சாலை அகலத்தைக் கொண்டுள்ளன. இதுபோன்ற முறைப்படுத்தப்பட்ட லேஅவுட்களில் உள்ள சாலைகள், அவற்றின் அருகே புதிதாக அமைக்கப்பட்ட லேஅவுட்களுக்கான அணுகுச் சாலைகளாகச் செயல்படுவதால், புதிதாக அமைக்கப்பட்ட இந்த லேஅவுட்களுக்கான திட்டமிடல் அனுமதியும் தாமதமானது.
இதை கருத்தில் கொண்டே தமிழ்நாடு முழுக்க லேஅவுட்களுக்கான குறைந்தபட்ச சாலை அகல விதிமுறையை தளர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
சாலைகள் திட்டம்: தமிழ்நாடு பட்ஜெட்டில் பட்ஜெட்டில், கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ₹1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ₹300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ₹1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகள் அகலப்படுத்தப்படும். 18 மீட்டர் முதல் 30 மீட்டர் வரை சாலைகள் அகலப்படுத்தப்படும். 2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.300 கோடியில் மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு செய்யப்படும, என்று பட்ஜெட் அறிவிப்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
பல்வேறு ரிங் ரோடு திட்டங்கள்: அதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு ரிங் ரோடு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் சாலைத் திட்டங்கள் பின்வருமாறு,
🔹சிவகாசிக்கு வெளிவட்ட சாலை
🔹 மன்னார்குடிக்கு ரிங் ரோடு
🔹திண்டுக்கல்லுக்கு பைபாஸ்
🔹திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் இடையே உயர்மட்ட பாலம்
🔹அவினாசி மேட்டுப்பாளையம் ரோடு நான்கு வழிச்சாலை
🔹விழுப்புரத்தில் கோரையாற்றின் குறுக்கே பாலம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
மன்னார்குடி சாலை: மன்னார்குடியைச் சுற்றி 22 கி.மீ.க்கு ரிங்ரோடு அமைக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கிராம சாலைகளைத் தவிர மூன்று மாநில நெடுஞ்சாலைகளையும் இந்த சாலை இணைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் ரிங் ரோடு அமைக்கப்படும் மிக முக சிறிய நகரமாக மன்னார்குடி மாறி உள்ளது. தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மன்னார்குடி எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் ஏற்கனவே அங்கே பேருந்து நிலையம் மொத்தமாக புனரமைக்கப்பட்டு மத்திய பேருந்து நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் ரிங் ரோடு அமைப்பது மன்னார்குடியில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்க வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . முன்மொழியப்பட்ட சுற்றுச் சாலையுடன் கிராமப்புற சாலைகளை இணைப்பதன் மூலம் விவசாய விளைபொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு மிக எளிதாக கொண்டு செல்ல முடியும்.
ரிங் சாலை கும்பகோணம்-மன்னார்குடி-அதிராம்பட்டினம் சாலையை இணைக்கும் (மாநில நெடுஞ்சாலைகள் எண். 66); திருவாரூர்–மன்னார்குடி–முத்துப்பேட்டை சாலை (SH எண். 22); மன்னார்குடி–சேதுபாவசமுத்திரம் சாலை (SH எண். 46); மற்றும் மன்னார்குடி–திருமக்கோட்டை–சொக்கனாவூர் சாலை உள்ளிட்ட பிற சாலைகள்; மன்னார்குடி-ஒரத்தநாடு-திருவோணம் சாலை மற்றும் ஒரு சில கிராமப்புற சாலைகளை இது இணைக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications