தமிழகத்தின் புதிய ஆளுநர் இவர்தான்? டெல்லியில் உருளும் ரவி பெயர்? விஜய்க்கு கடிவாளம் போடும் அமித் ஷா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டிற்கு விரைவில் புதிய நிரந்தர ஆளுநர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய ஆளுநர் தற்காலிக ஆளுநர் என்பதால் விரைவில் நிரந்தர ஆளுநர் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

கடந்த மார்ச் மாதம், தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

tvk vijay

தற்போது இடைக்கால ஏற்பாடாக அர்லேகர் பதவியில் நீடித்து வரும் சூழலில், தமிழகத்திற்கு ஒரு முழுநேர நிரந்தர ஆளுநரை நியமிப்பதற்கான ஆலோசனைகள் டெல்லி வட்டாரத்தில் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய ஆளுநர் நியமனப் பட்டியலில் மீண்டும் ஒரு 'ரவி' என்ற பெயர் அடிபடுவதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாபிக்! ஆனால், இந்த முறை அது பழைய ஆளுநர் ஆர்.என். ரவி அல்ல. டெல்லி மேலிடத்தின் தீவிர பரிசீலனையில் இருக்கும் அந்தப் பெயர்.. ரவி சங்கர் பிரஷாத்!

யார் இந்த ரவிசங்கர் பிரசாத்?

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தமிழகத்தைப் போன்ற மிக முக்கிய மாநிலங்களுக்கு ஆளுநர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, மத்திய அரசு வழக்கமாகச் சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்த, நீண்ட அரசியல் மற்றும் நிர்வாகப் பின்னணி கொண்ட ஆளுமைகளையே முன்னிறுத்துகிறது.

மாநில அரசின் சட்ட மசோதாக்கள், அரசியல் சாசன விதிகள் தொடர்பான விவாதங்கள் எழும்போது, ஒரு சட்ட வல்லுநராக இவரால் ஆளுநர் மாளிகையைத் சரியாக வழிநடத்த முடியும் என்று டெல்லி தலைமை கருதுவதாகக் கூறப்படுகிறது. ஆர்.என். ரவிக்குப் பிறகு தமிழக ஆளுநர் பதவி என்பது வெறும் நிர்வாகப் பதவி மட்டுமல்ல, அது ஒரு மிக முக்கிய அரசியல் சாசன பதவி என்பதை டெல்லி உணர்ந்துள்ளது.

இடைக்கால பொறுப்பில் அர்லேகர்

தற்போது கூடுதல் பொறுப்பில் இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரளாவின் முழுநேர ஆளுநராக இருந்து கொண்டே தமிழகத்தின் பணிகளையும் கவனித்து வருகிறார். ஒரு மாநிலத்திற்கு நிரந்தர ஆளுநர் இல்லாத பட்சத்தில், நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்க்க அண்டை மாநில ஆளுநருக்குக் கூடுதல் பொறுப்பு வழங்குவது இயல்பான ஒன்றுதான்.

எனினும், தமிழகம் போன்ற பெரிய மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலத்திற்கு நீண்ட நாட்களுக்கு இடைக்கால ஆளுநரை வைப்பது நிர்வாக ரீதியாகச் சாத்தியமில்லை. எனவேதான், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மற்றும் நடப்பு அரசியல் சூழல்களைக் கணக்கில் கொண்டு புதிய ஆளுநர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த சஸ்பென்ஸ் என்ன?

ரவிசங்கர் பிரசாத் தவிர, சில ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பெயர்களும், குறிப்பாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்றவர்களின் பெயர்களும் உலா வருகின்றன. எனினும், அவர் முற்றிலும் ஆன்மீகத் தளத்தில் இயங்குவதால் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மத்திய அரசின் இந்த வியூகம் பலிக்குமா, மீண்டும் தமிழக ஆளுநர் மாளிகையில் ஒரு 'ரவி'யின் ஆதிக்கம் தொடருமா என்பது குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்போது மட்டுமே உறுதியாகும். எது எப்படியோ, லோக் பவனின் அடுத்த புதிய வரவு, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதும் என்பதில் சந்தேகமில்லை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+