இது லிஸ்டுலேயே இல்லையே.. தமிழ்நாடு முழுக்க 100 இடங்களில் இ சார்ஜிங் பாயிண்ட்! மின்சார வாரியம் அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.
அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது.
ஓலா பைக்: ஓலா பைக் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கே உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் ஓலா முழுக்க முழுக்க எலக்ட்ரிக் பவரில் இயங்கும் பைக் ஆகும். ஓலாவை தொடர்ந்து இ வாகனங்களின் உற்பத்தி தமிழ்நாடு நோக்கி திரும்ப தொடங்கி உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இ வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
நிசான் நிறுவனம்: இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் ₹5300 கோடி முதலீடு செய்ய நிசான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. நிசான் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருக்கும் நிசான் நிறுவன ஆலை விரிவுபடுத்தப்பட உள்ளது. முன்பு உள்ள ஆலையில் எஞ்சின் கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு வந்தன. தற்போது இங்கே புதிய எலக்ட்ரானிக் கார் உருவாக்க ஆலை அமைக்கப்பட உள்ளது.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்ய நிசான் நிறுவனத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 5,300 கோடி மதிப்பில் முதலீடு செய்யப்படுவதால் 2,000 பேருக்கு சென்னையில் வேலைவாய்ப்பு உருவாகும்.
அதோடு ஆர் அண்ட் டி ஆராய்ச்சிகளும் இங்கே மேற்கொள்ளப்பட உள்ளது. இங்கே உற்பத்தி செய்யப்படும் நிசான் எலக்ட்ரிக் வாகனங்கள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்படும். நிசானின் எலக்ட்ரிக் வாகனங்கள் சென்னையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்ஜிங் பாயிண்ட் பயன்பாடு: இந்த நிலையில் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாய்ண்ட் அமைக்கப்பட உள்ளது.

சாலை ஓரம் அரசு நிலத்தில் தமிழ்நாடு முழுக்க 100 இடங்களில் சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இந்த சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இங்கே மின்சாரம் வழங்கப்பட்டு அதில் சார்ஜிங் பாய்ண்ட் இயங்கும்.
வரும் காலங்களில் மக்கள் பயன்பாட்டை பொறுத்து இந்த சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முன்னேற்றம்: தமிழ்நாடு கிட்டத்தட்ட எலக்ட்ரிக் வாகனங்களின் தலைநகராக உருவெடுக்க தொடங்கி உள்ளது. கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் அதிகரித்துள்ளன. 2022ம் வருடம் தமிழ்நாடு மொத்தம் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதில் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது. தற்போது செய்யப்பட்டு உள்ள நிசான் முதலீடு 2023ல் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடாக பார்க்கப்படுகிறது.
-
ஏவுகணை வேகத்தில் நடந்த ட்விஸ்ட்.. எகிறும் தங்கம் விலை... இந்தியப் பொருளாதாரத்தின் 'திடீர்' ஜாக்பாட்! -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
200 ரூபாய் போதும்! நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! வங்கிகள் சொல்லாத மேஜிக் கணக்கு! கால்குலேட்டர் எடுங்க -
எப்பா தம்பிகளே! கொரோனாவுல உங்களுக்கு ஆல் பாஸ் போட்டது நான்தான்! அதிமுகவை மறக்கலாமா? இபிஎஸ் கலகல -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை












Click it and Unblock the Notifications