தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்.. FASTag கட்டாயம்! ரொக்கமாக கொடுக்க முடியாது
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சுமார் 60 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் ரொக்கமாக பணம் செலுத்தும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கப்பலூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் ரூ.5 முதல் 15 வரை உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது. சுங்க கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் இன்று முதல் இணையவழி வழியாகவோ அல்லது பாஸ்டேக் மூலமாகவே கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வந்துள்ளது. எனவே கையில் ரொக்கமாக பணம் கொடுத்து சுங்கச்சாவடிகளில் செல்ல முடியாது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் வருடாந்திர கட்டண உயர்வு முடிவின்படி சுங்கக் கட்டணமானது மாற்றப்படுகிறது. அதன்படி தான் நள்ளிரவு முதல் தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வானது அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணமானது உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 சுங்கச்சாவடிகளில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது. குறைந்தபட்சமாக ரூ 10 முதல் 25 ரூபாய் வரை கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
குறிப்பாக கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.35 ரூபாயும், இருமுறை பயணிக்க 50 முதல் 55 ரூபாயும், மாதாந்திர கட்டணம் 1,165 இல் இருந்து 1195 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்ல 60 ரூபாயும், இருமுறை செல்ல ரூ. 85 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.1,880 இல் இருந்து ரூ.1925 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கனகர வாகனங்களுக்கு இந்த கட்டணமானது 5 முதல் ரூ.50 வரை அதிகரித்துள்ளது. இணையவழி வழியாகவோ அல்லது பாஸ்டேக் மூலமாகவே கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வந்துள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications