தட்டித்தூக்கிய தமிழ்நாடு.. வங்கிக்கடனில் டாப் லிஸ்ட்டில் வந்த 27.76%.. வியந்து பார்க்கும் தேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய நிதித்துறையையே அதிர வைக்கும் வகையிலான ஒரு புதிய ஆய்வுத் தகவல் தற்போது வெளியாகி ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் வங்கிக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிக அதிவேகமாக வளர்ந்து வரும் இப்போதைய சூழலில், வங்கிக் கடன் பெறுவதில் தமிழ்நாடு மிக பிரம்மாண்டமான சாதனை படைத்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த செய்திதான் பலரது கவனத்தை பெற்று வருகிறது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள மிகத் துல்லியமான மாவட்ட வாரியான கடன் மற்றும் வைப்புத் தொகை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.. இந்த ஆய்வின் முடிவுகள், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் எந்த திசையை நோக்கி நகர்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளன.

bank loans India Tamil Nadu economy credit growth financial rankings state economy

வங்கி கடன் தமிழகம் சாதனை

இந்த ஆய்வறிக்கையின்படி நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த வங்கிக் கடனில் சுமார் 27.76 சதவீத பங்கினைத் தமிழ்நாடு மட்டுமே பெற்று வியக்கத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மாநில வாரியாகக் கணக்கிடப்பட்ட இந்தத் தேசியக் கடன் பட்டியலில், தமிழ்நாடு முதலிடத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், எப்போதும் முதலிடத்தில் இருக்கும் மராட்டிய மாநிலம் 27.70 சதவீதத்துடன் நூலிழையில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இவற்றுக்கு அடுத்தபடியாக கர்நாடகா, குஜராத் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

வங்கிக்கடனில் அசத்தல்

இந்தியாவின் ஒட்டுமொத்த வங்கிக் கடன்களில் இந்த 5 மாநிலங்கள் மட்டுமே சேர்ந்து சுமார் 75 சதவீதத்திற்கும் அதிகமான தொகையைப் பெறுகின்றன என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையும் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ்நாடு இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னணி நிலையை அடைந்ததற்குப் பின்னால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் அசுரத்தனமான தொழில் மற்றும் வணிக மையங்களின் வளர்ச்சியே மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

அசுர வேகத்ரில் தொழில் வளர்ச்சி

முக்கியமாக சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர், சேலம் மற்றும் திருச்சி ஆகிய நகரங்கள் தொழில் துறையில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. வாகன உற்பத்தி, அதிநவீன தகவல் தொழில்நுட்பம், உலகத்தரம் வாய்ந்த ஜவுளி ஏற்றுமதி, தோல் பொருட்கள் உற்பத்தி, பிரம்மாண்ட பொறியியல் தொழில்கள், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் துறைமுக வர்த்தகம் எனப் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.

அதனால்தான் இங்குள்ள தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான கடன்களின் தேவை நாளுக்கு நாள் கட்டுக்கடங்காத அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம்

அதேசமயம், நாட்டின் நிதி நிலவரம் குறித்து இந்த ஆய்வு இன்னொரு முக்கிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 54 கோடிக்கும் மேற்பட்ட புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் 69 சதவீதம் பெண்களின் பெயரில் துவங்கப்பட்டுள்ளது பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல யூபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் மூலம் தினசரி எழுபது கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் தடையின்றி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய அசாத்திய டிஜிட்டல் வளர்ச்சிக்கு மத்தியிலும், வங்கிக் கடன் வினியோகம் என்பது நாடு முழுவதும் சமமாகப் பரவவில்லை என்ற கசப்பான உண்மையும் இந்த ஆய்வின் மூலம் வலுவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு - பொருளாதார மையம்

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு நிலவரப்படி, இந்தியாவில் உள்ள மொத்தம் 762 \மாவட்டங்களில், வெறும் 11 மாவட்டங்கள் மட்டுமே இந்தியாவின் ஒட்டுமொத்த வங்கிக் கடனில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான தொகையைப் பெற்று ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் மும்பை, மும்பை புறநகர் மற்றும் புதுடெல்லி ஆகிய 3 மாவட்டங்கள் மட்டுமே 30.3 சதவீத கடனைப் பெற்றுள்ளன.

முதல் 7 மாவட்டங்கள் சேர்ந்து 43.4 சதவீத கடனைக் கைப்பற்றியுள்ள நிலையில், நாட்டின் பிற்பகுதியில் உள்ள சுமார் 381 கீழ்மட்ட மாவட்டங்கள் அனைத்தும் சேர்ந்து வெறும் 4.9 சதவீதக் கடனை மட்டுமே பெற முடிகிறது என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரமும் இந்த ஆய்வின் மூலம் துல்லியமாக வெளிப்படுகிறது.

ஓட்டுமொத்தமாக பார்த்தால், நாட்டின் மிக முக்கியப் பொருளாதார மையமாகத் திகழும் மராட்டிய மாநிலத்தையே பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு இந்த அசுர வளர்ச்சியை எட்டியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது....!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+